பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 6.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 அறத்துப்பால் வாழ்க்கையானது, நோற்பாரின் = தவஞ்செய்வாரைக் காட் டிலும். நோன்மை உடைத்து = தவவலிமை உடையதாகும். (ஆற்றின்-ஆறு = நல்ல நெறி; இழுக்குதல் = தவறுதல்இழுக்கா(த)=தவருத - மணக்குடவர் உரை) பிறரையும் நன்னெறியிலே ஒழுகப் பண்ணித் தானும் அறத்தின்பா லொழுகும் இல் வாழ்க்கை தவஞ்செய்வாரினும் வலியுடைத்து. (பரிமேலழகர் உரை ) தவஞ்செய்வாரையுந் தத்த நெறியின்க னெழுகப் பண்ணித் தானுந் தன்னறத்திற் றவருத இல்வாழ்க்கை அத்தவஞ் செய்வார் நிலையினும் பொறையுடைத்து. (விளக்கவுரை) ஆற்றின் ஒழுக்கி என்பது குறட் பகுதி. ஒழுகுதல் தன்வினே-அதாவது தான் நடத்தல்; ஒழுக்குதல் பிறவினே-அதாவது பிறரை நடக்கச் செய்தல். குறளில் ஒழுக்கி எனப் பிறவினையாகக் கூறியிருத்தலின், 'மனைவி, மக்கள் முதலிய மற்றவரை நல்ல வழியில் நடக்கச் செய்து' என்று பொருள் பண்ண வேண்டும். இல் வாழ்க்கை கோன்மை உடையது என்ருல், இழ்வாழ்வான் நோன்மை உடையவன் என்பது கருத்து. நோன்மை என்ருல் தவவன்மை. தவம் என்ருல் ஏதோ தனிப்பட்டது- அப்பாற்பட்டது என்று எவரும் தயங்கவேண்டா. ஒழுங்கான முறையில் இல்லறம் நடத்து வதும் ஒர் உயர்ந்த தவமே. மேலும் இந்த இல்லறத் தவம், துறவிகளின் துறவுத்தவத்தைவிட வலியதும் சிறந்ததும் ஆகும். சமயநூலார் இல்லறத் துறவு என்று சொல்வது இந்த இல்லறத் தவத்தைத்தான் என்பது எனது கருத்து. இல்லறத் துறவு என்ருல் வேறு எதுவும் இல்லை; பொழுது விடிந்து பொழுது போகும்வரையும் தம் மனைவி மக்களை மட்டுமே கட்டியழுது கொண்டு- அவர்கட்கு வேண்டிய வற்றைமட்டுமே தேடி உழன்று கொண்டு கிடக்காமல், மற்ற மன்பதைக்கும் (சமுதாயத்துக்கும்) தொண்டாற்று தலே இல்லறத்துறவு. இத்தகைய தொண்டு புரிவோரே 'இல்லறத் துறவிகள்' என்பது என் கருத்து.