பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 6.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்வாழ்க்கை 15 தவஞ்செய்வார் தங்கருமம் செய்வார் என மற்ருெரு குறளில் கூறியுள்ளபடி, தாம் மட்டுமே தனியே அமர்ந்து 'மூக்கு முழிகளை மூடிக்கொண்டு செய்யும் துறவுத் தவத்தைவிட, மனைவி மக்களுடன் மக்கள் சமுதாயத்துக் கும் தொண்டாற்றும் இல்லறத்தவம் எவ்வளவோ சிறந்தது தானே இது குறித்தே, இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை யுடைத்து' என்ருர் வள்ளுவர். ஆல்ை, "எல்லோ ரையும் ஆற்றின் ஒழுக்கித் தானும் அறனிழுக்காது நடத்து கின்ற இல்வாழ்க்கையே நோற்பாரின் நோன்மையுடைத்து' என்பதும் ஈண்டு நினைவிருக்க வேண்டும். எனவே, இல்லறத் தவத்துக்குரிய இலக்கணம், அனைவர்க்கும் ஆகவேண்டிய உதவிகளைச் செய்து அவாவரையும் நல்ல வழியில் நடத்து தல், தானும் நல்ல வழியில் நடத்தல் என்னும் இரண்டும் உடைமை எனத் துணிக. . இதைத்தானே பிசிராந்தையார் என்னும் சங்கப் புலவர் செய்தார் அவர் தமது பண்பாட்டால் மனேவி, மக்கள், தொழிலாளர் முதலிய எல்லோரையும் திருத்தினர்; அரசனும் நல்லவன், ஊராரும் சான்ருேர்கள்; அதனல் அமைதியான நல்ல சூழ்நிலையில் நல்வாழ்வு வாழ்ந்தார் புலவர். இந்த இனிய இல்லறவாழ்வால், வயது மிக நிரம் பியும், என்றும் நரைதிரையில்லாத இளைஞராகவே அவர் காணப்பட்டார். என்றும் இளமை பெற்ற இதனினும் பெரிய தவம்-பெரிய யோகம் வேறு என்ன? இதனே, தம் எ ன் று ங் கு ன் ரு இளமை பற்றி அவரே பாடிய ' யாண்டு பலவாக நரையில ஆகுதல் யாங்காகியர் என வினவுதி ராயின், மாண்டஎன் மக்களொடு மனைவியும் கிாம்பினர், யான் கண்டனையர் என் இளையரும்... சான்ருேர் பலர் யான் வாழு மூரே ' என்னும் புறநானூற்று (191) பாட்டா லறியலாம். 9. அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை (தெளிவுரை) உலகில் எது எதுவோ அறம் என்று சால்லப்படினும், உண்மையில் அறம் என்று சொல்லப்