பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 6.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 அறத்துப்பால் படுதற்கு உரியது இல்வாழ்க்கைதான்! அந்த இல்வாழ்க்கை யும் பிறைெருவன் பழிக்காதபடி இருந்தாலே சிறந்ததாம். ' அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் ந்ன்று ’ (பதவுரை) அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை= அறம் அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டதெல்லாம் இல்வாழ்க்கைதான் அஃதும் = அப்பேர்ப்பட்ட சிறப் புடைய இல்வாழ்க்கையும், பிறன் பழிப்பது இல்லாயின்= பிறன் எவனும் பழிப்பதற்கு இடமில்லாதிருக்குமானல் தான், நன்று = நல்லதாகும்-சிறந்ததாகும். (அறன்-அறம்) (மணக்குடவர் உரை) அறனென்று சிறப்பித்துச் சொல்லப் பட்டது இல் வாழ்க்கையே; அதுவும் நன்ருவது பிறளுெருவற்ை பழிக்கப் படுவதொன்றை யுடைத் தல்ல வாயின் பழிக்கப்படுவ தென் றது இழிகுலத் தாளாகிய மனை யாளே, (பரிமேலழகருாை) இருவகை யறத்தினும் நூல்களான் அறனென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க் கையே; ஏனைத் துறவறமோவெனின், அதுவும் பிறனற் பழிக்கப்படுவதில்லேயாயின், அவ்வில்வாழ்க்கையோடு ஒரு தனமைததாக கனறு. (விளக்கவுரை) 'அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்பதற்கு வாடிக்கையாக ஏதேதோ பொருள் சொல்வது வழக்கம். இல்லறம், துறவறம் என அறம் இருவகை; அவற்றுள் இல்லறமே சிறந்தது என்னுங் கருத்தில் பரிமே லழகர் எழுதியுள்ளார். இன்னும் எத்துணையோ அறங்கள் (முப்ப்த்திாண்டு அறங்கள்) சொல்லப்படுவதுண்டு; அவற் றுள் இல்லறமே சிறந்தது என்றெல்லாம் சொல்லுவதுண்டு. இங்கே நான் என்ன சொல்லுகிறேன்! அறமே இல்வாழ்க்கை-இல்வாழ்க்கையே அறம், கரும்பே கன்னல்கன்னலே கரும்பு என்பதுபோல அகராதிதொகுப்பவர்கள், அறம் என்பதற்கு நேரே இல்வாழ்க்கை எனவும், இல்வாழ்க்கை என்பதற்கு நேரே அறம் எனவுங்கட எழுதிவைக்கலாம். இதற்கு நிகண்டு போன்ற தொரு சான்று, 'அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்பதே, ( தொடரும் )