பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 6.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகையணங்குமுத்தல் 3 (ஆராய்ச்சி விரிவுரை) ஆசிரியர் இந்தக் குறளில் உயிர் இயல்புகளுள் ஒன்றினைப் பிழிந்து வைத்துள்ளார். இக் குறளைப் படிக்குங்கால், அந்தக் கருத்தே என் நெஞ்சை அள்ளுகிறது. உயிர்களின் உள்ள இயல்பை இங்கே ஒளிப்பதில் பயனில்லை; தெள்ளென எடுத்துக் காட்டுவல். காலனுக்கும் அஞ்சாத கடுங்கண் மறவர்கள் கூட, கருத்துக் கினிய காதல் கல்லாரிடம், வறுக்குஞ் சட்டியில் இட்ட வண்டைக்காய் போல வாடி வதங்கிச் சுருண்டு மடங்கி விடுகின்றனரே! பறவை, விலங்குகளி னிடமும் இவ்வியல்பைக்காணலாம். இஃதோர் உயிரியல்பு. இன ஊக்கங்களுள் ஒன்ருகிய காதல் ஊக்கம்' (Mating) என உளநூலார் இதனைக் குறிப்பிட்டிருப்பது நினைவு கூரத் தக்கது. போர்க்களத்தில் பகைவர்களையெல்லாம் கலங்கச் செய்யும் பேராண்மையுடைய தலைமகன், ஒரு பெண்ணின் ெ ற் றி ய ழ கு க் கு உடைந்தே போன எளிமையை என்னென்பது அலுவலகத்தில் ஆரவாரஞ் செய்கின்ற ஐயா, அடுப்பங்கரையில் அம்மாவிடம் அடக் கந்தான். என்று உலகியலில் பேசப்படுவதும் இந்தக் கருத்தைத் தழுவியது தானே ? காதல் சுவையில் விறுவிறுப்புடையவர்கள் இந்தக் குறளை ஊன்றிக் கவனிக்க வேண்டும். இப்போது நாடகக் கதைகளாலும் காட்டியங்களாலும் பரப்பப்படுகின்ற நாய்க் காதல் அன்று இக்குறளில் சொல்லப்படுங் காதல். பகைவர்களை முறியடித்துத் தாய் காட்டுக்குத் தொண் டாற்றும் தறுகண் மறவனது தமிழ்க் காதலாகும் இது. வீரமற்ற கோழை நெஞ்சங்களுக்கு - சேலேகட்டிய உரு வங்களின் பின்னே மோப்பம் பிடித்துத் திரிந்து வெம்பிப் போகும் இளம் பிஞ்சுகளுக்கு நினைவிருக்கட்டும் இது! இன்னுேர்க்குக் காதலைப்பற்றி கினைக்க உரிமை ஏது? இந்தக் குறளில் கண்ணுரும் என்ற சொல்லுக்கு, போர்க்களத்தில் வந்து கண்ணுத - சேராத பகைவர்' எனப்பரிமேலழகர் உரை பகர்ந்துள்ளார். இவ்வாறு பொருள் கூறுதல் தமிழிலக்கிய மரபாகாது. இவர் இவ் வாறு பொருள் உரைத்ததற்குக் காரணம், கண்ணுரும் (கண்ணுர் + உம்) என்பதில் உள்ள 'உம்' மை 'இறந்தது தழுவிய எச்ச உம்மை' எனக் கொண்டதுதான். அண்ண் னும் வந்துவிட்டார் என்ருல், இதற்குமுன்பு இன்னும்