பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 6.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ தகையணங்கு றுத்தல் ε) இக்குறளில் உள்ள ஒஒ' என்பது உயிர் அளபெடை. இலக்கணக்காரர்கள் இப்போது சொல்லட்டும், இந்த உயிரளபெடை இடம் கிறைப்பதற்காகவா என்று ஒஒ' என்று நீண்ட நேரம் கத்திக் கதறுவதுதானே இதன் பொருள்! இந்த 'ஒ' என்னும் இடைச்சொல் கழிவிரக்கப் பொருளில் உள்ளது. முன்பு இருந்து, இப்போது கழிந்து போனதற்காக வருந்துவதுதான் கழிவிரக்கம். முன் பிருந்த தனது பீடு இப்போது ஒழிந்து போனதாக ஒஒ' என வருந்துகிருன் அல்லவா? இந்த ஒ' என்னும் இடைச் சொல்லும், கண்ணுரும் என்பதிலுள்ள 'உம்' இடைச் சொல்லும் கப்பலில் 'சுக்கான் திருப்புவது போன்ற இலக்கணத் திருப்பங்களாம். கண்ணுரும் என்பதிலுள்ள 'உம்' என்பது தலைவனுக்கு முன்பிருந்த பெருமையையும், 'ஓஒ என்பது இப்பொழுது ஏற்பட்டுள்ள சிறுமையையும் எடுத்துக்காட்டும் இரு துருவங்களுமாகும், அடுத்து, உடைந்ததே என்னும் சொல்லேக் காண் பாம். உடைதல் என்பது, அழிவின் இறுதி எல்லேயே. ஒரு கலமோ (பாத்திரமோ), ஒரு கண்ணுடிப் பொருளோ ஓட்டையானலும் கீறல் விழுந்தாலும் ஓரளவு பயன் படுத்த முடியும்; ஆனல் உடைந்து போயின் முடியவே முடியாதன்ருே? இப்பொழுது காண்க, பீடு உடைந்ததே' என்பதிலுள்ள பொருள் நுணுக்கத்தை மேலும், 'உடைந்தது' என்பதோடு கில்லாமல், இறுதியில் 'ஏ' சேர்த்து உடைந்ததே என்று கூறியிருப்பது, உடைந்தே விட்டது என்ற உறுதிப் பாட்டையும், உடைந்தது உடைந்ததுதானே என்ற வருத்தத்தின் அழுத்தத்தையும் அறிவிப்பதை ஒர்க! ஒருவரின் முகக் கவர்ச்சிக்கு நெற்றியின் அழகிய அமைப்புச் சிறந்ததொரு காரணம் என்னும் உடற்கூற் றியல்பு இக்குறளால் விளங்குகிறதன்ருே? மயக்கத்தைப் போக்கும் திருறுே (விபூதி), மாயை' என்னும் பெண்ணின் மயக்குகிற நெற்றியில் இடப்பட்டதும், காணும் இளைஞர் களின் காமமயக்கத்தை மிகுதியாக்கிவிட்டது என்னும் பிரபுலிங்க லீலை நூற்கருத்து ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது. (செய்யுள் - 191.)