பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

டார்வின் தந்த புதிய கொள்கை

எல்லா உயிர்களையும் இறைவனே படைத்தான் என்ற கொள்கையானது, காலம் காலமாக வாழ்ந்து வந்த மக்கள் மத்தியிலே, மாறாத கொள்கையாக இருந்து வந்தது.

சென்ற நூற்றாண்டில் டார்வின் எனும் மேல் நாட்டு ஆராய்ச்சியாளர், மிகவும் அரிதின் முயன்று, ஒரு புதிய கொள்கையை உலகுக்கு அறிவித்தார். -

உயிர்கள் எல்லாம் ஒவ்வொன்றின் உதவியால் தாமே உருவாகிக் கொண்டன. அந்த அற்புதமான பரிணாம வளர்ச்சியால் தான், பல்வேறுபட்ட பல்லாயிரக் கணக்கான புதிய உடலமைப்புக் கொண்ட உயிர்கள் உருக் கொண்டன என்பதுதான் டார்வின் புதிய கொள்கையாகப் பிறந்தது.

எண்ணற்ற கோடி உயிர்கள் இந்த உலகில் இருக்கின்றன. அவற்றை நீந்துவன, ஊர்வன, நடப்பன, பறப்பன என்று பிரித்து வகைப்படுத்திக் காட்டுவார்கள் விஞ்ஞானிகள். ஒவ்வொரு பிரிவாகப் பிரிந்த உயிர்கள் உடலால் வளர்ந்து உயிரினங்கள் பரிணாமம் பெற்றன என்றார்சார்லஸ் டார்வின் என்ற பேரறிஞர்.

இப்படிப்பட்ட எல்லா உயிரினங்களும் ஒரு செல் உயிரமைப்பிலிருந்துதான், படிப்படியாக வளர்ந்தன என்றும், அதற்கான கால அளவு பல கோடிக் கணக்கான ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்பதாகவும் டார்வின் விளக்கம் அளித்தார். - - -

இவற்றை நாம் எப்படி இனம் கண்டு கொள்ள முடியும்? பல்வேறுபட்ட உயிரினங்களின் உடலமைப்பைப் பார்க்கும் பொழுதே, அந்த உண்மை நமக்குப் பளிச்செனப் புலப்பட்டு விடும். -

சுவற்றில் திரியும் பல்லி இனமும், புனலில் திரியும் முதலை இனமும், வீட்டில் வாழும் பூனை இனமும், காட்டில்