பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

நாடித்துடிப்பை அறிய பல இடங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான இடம் மணிக்கட்டுப் பக்கத்தில் உள்ள கட்டை விரல் பகுதியில் காணலாம். பிறகு கழுத்துப் பகுதியிலும் காணலாம்.

3. நுரையீரல் இரத்த ஒட்டம்

(The Pulmonary Circulation)

நுரையீரல் இரத்த ஒட்டம் என்பதானது, நுரையீரலில் இரத்தம் சுத்தம் செய்யப்படுகிற காரியம் நடைபெறுகிற இரத்த ஒட்டமாக அமைந்திருப்பதுதான்.

இது எப்படி நடைபெறுகிறது என்று பார்ப்போம்.

உடலின் மேற் பாகத்திலிருந்து மேல் பெருஞ் சிரையின் மூலமாக (Superior Venacava) வும், கீழ்ப்பெருஞ்சிரையின் மூலமாக உடலின் கீழ்ப்பாகத்திலிருந்தும், வருகிற அசுத்த இரத்தம், வலது ஏட்ரியத்திற்குள் கொண்டு வரப்படுகிறது.

வலது ஏட்ரியம் சுருங்கும்போது, அசுத்த இரத்தமான்து வலது வெண்டிரிக்கிளுக்குள் செல்கிறது.

பிறகு, வலது வெண்டிரிக்கிள் சுருங்கும் போது, அந்த இரத்தம் நுரையீரல் தமணி (Pulmonary Artery) வழியாக, நுரையீரலுக்குள் செல்கிறது.

இதையே நுரையீரல் இரத்த ஒட்டம் என்கிறார்கள்.

குறிப்பு: இதில் ஒரு விஷேஷமான தன்மை ஏற்பட்டு விடுகிறது. எப்பொழுதும் தமணிக் குழாய்களில் சுத்த இரத்தம் தான் ஒடும். ஆனால் நுரையீரல் தமணியில் மட்டும் அசுத்த இரத்தம் தான் ஒடும். ஆனால் நுரையீரல் சிரையில் மட்டுமே சுத்த இரத்தம் ஒடுகிறது.