பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 99

அதுபோலவே, சிரைகளில் எப்பொழுதும் அசுத்த இரத்தம் தான் ஒடுகிறது.

இந்த வேறுபாட்டை விளங்கிக் கொள்க.

2. 66og @ gpc_c_c (Portal Circulation)

போர்ட்டல் சிரையானது வயிற்றுக் குழியினுள் சிறிய ஒமென்டத்தின் (Omentum) வலது பகுதியில் காணப்படு கிறது. சிறிய ஒமென்டம் என்பது, கல்லீரல் நுழைவாயிலிருந்து இரைப்பையின் சிறிய வளைவு, முன் சிறுகுடல் ஆகியவற்றின் பாகம் வரை நீண்டிருக்கிறது.

எனவே, போர்ட்டல் இரத்த ஒட்டம் என்பது, கல்லீரல் வழியாக இரத்தம் செல்வதைக் குறிப்பதாகும்.

இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், மண்ணிரல் (Spleen): கணையம் (Pancreas) பித்த நீர்ப்பையிலிருந்து, பெறுகிற அசுத்த இரத்தமெல்லாம் போர்ட்டல் சிரை எடுத்துக் கொண்டு, கல்லீரலுக்குச் செல்கிறது.

இந்தப் போர்ட்டல் சிரையானது, சிறிய கிளைகளாகப் பிரிந்து மேலும் பல தந்துகிகளாகப் பிரிந்து, கல்லீரலுக்குள் நுழைந்து, அங்குள்ள கழிவுப் பொருட்களைப் பெற்றுக் கொண்டு, கீழ்ப் பெருஞ் சிரையோடு போய் ச் சேர்ந்து கொள்கிறது. *

அதாவது சிரை இரத்தமானது, பொது இரத்த மண்டலத் திற்குள் செல்வதற்கு முன்பாக, கல்லீரல் வழியாகச் செல்கிறது என்பதுதான், இந்த இரத்த ஓட்டத்தின் சிறப்புக் குறிப்பாகும்.

அதாவது, கல்லீரலானது தனது பாதுகாப்புப் பணிகளை யும், வளர்சிதை மாற்றத்தில் மேற்கொள்ளும் பங்கினையும் இந்த இரத்த ஓட்டத்தின் மூலமாக நிறைவேற்றிக் கொள்கிறது.