பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 101

இவற்றில் பல தந்துகிகள் சேர்ந்து நுண்சிரைகளாக (Wenules), பல நுண்சிரைகள் சேர்ந்து சிரைகளாக (Veins) மாறிக் கொண்டு, கீழ்ப் பெருஞ்சிரை எனும் மகா இரத்தக் குழாயாக மாறுகின்றன. இந்தக் கீழ்ப் பெருஞ்சிரைதான், உடலின் கீழ் பாகத்திலுள்ள அசுத்த இரத்தத்தையெல்லாம் சேகரித்துக் கொண்டு, இதயத்திற்கு எடுத்துச் செல்கிறது.

அதுபோலவே, உடலின் மேற்பாகத்தில் விளையும் வேண்டாத கழிவுப் பொருட்களை மேற்பெருஞ்சிரை ஏற்றுக் கொண்டு, இதயத்திற்கு எடுத்துச் செல்கிறது.

இவ்விரண்டு பெருஞ்சிரையும் அசுத்த இரத்தத்தைக் கொண்டு வந்து, வலது ஏட்ரியத்திற்குள் சேர்க்கிறது.

இதுவே பொது இரத்த ஒட்டமாகும். இதன் தொடர்ச்சி தான் நுரையீரல் இரத்த ஓட்டமாக அமைந்திருக்கிறது.

Fr:GaaCL (Lymphatic Circulation)

நிணநீர்: உடலின் ஒவ்வொரு திசுவுக்கும் உயிர்க் காற்றையும் உணவுப் பொருளையும் கொண்டு வருகின்ற இரத்தத் தந்துகிகளின் சுவர்களிலிருந்து, கசிந்து வருகின்ற பிளாஸ்மாவின் பாகத்திற்கே, நிணநீர் என்று பெயர்.

இத்தகைய நிண நீரானது, செல்களுக்கு உணவுப் பொருட்களையும் உயிர்க்காற்றையும் கொடுத்துவிட்டு, அவை உண்டாக்கியிருக்கின்ற கழிவுப்பொருட்களை மீண்டும் எடுத்துச் செல்லும் வேலையைச் செய்கின்றன.

இவ்வாறு பணியாற்றும் நிணநீர்த் தந்துகிகள் (Lymphatic Capillaries); #aaaristi, Gypfrssir (Lymphatic Vessels); flawsfit’. Quoting upstill (Lymphatic Duct); flavorff (plq3,3,sir(Lumphatic Nodles orglands) yabaol ggl'l3,sir என்பனவாக அமைந்து கொண்டு, நிணநீர் மண்டலம் என்ற ஒர் அமைப்பையே உருவாக்கிச் செயல்படுகின்றது.