பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1O2 டாக்டர். எஸ். நவராஜ செல்லையா

நிணநீர்மண்டலம், சிரை மண்டலத்திற்குத்துணையான ஒர் அமைப்பாகும். அதாவது, உடலின் வளர்சிதை மாற்றத்திலும், உயிரினத்தின் திரவங்களின் ஒட்டத்திலும் பிரதான பங்கு வகிக்கின்றது.

எனவே, நிணநீர் மண்டலம் என்பது உணவுச் சத்துப் பொருட்களைக் கிரகித்துத் தருகின்ற பெரும் பங்கையும் பெரும் பொறுப்பையும் வசிக்கிறது என்பதைக் கருத்தில் கொள்வோமாக.

இவற்றில் சில விளக்கங்களைத் தெரிந்து கொள்வோம். 1. நிணநீர் முடிச்சு அல்லது சுரப்பி

நிணநீர்க் குழாய்களில், ஆங்காங்கே அவரை விதை வடிவத்தில், இப்படிப்பட்ட சுரப்பிகள் இடம் பெற்றுள்ளன.

இத்தகைய சுரப்பிகள் கழுத்து, அக்குள், மார்பு, வயிறு, மற்றும் கால்களுக்கு இடையேயும் அதிகமாகக் காணப்படு கின்றன.

இச்சுரப்பிகள், லிம்போசைட்ஸ், மானோசைட்ஸ், மற்றும் எதிர்ப்பணுக்களையும் (Antibodies) உற்பத்தி செய்கின்றன. இந்த நிணநீர்ச்சுரப்பிகள் விஷப் பொருட் களையும், துன்பப்படுத்துகிற பாக்டீரியாக்களையும் வடிகட்டி, இரத்தத்துடன் சேரவிடாமல் தடை செய்து விடுகின்றன.

2. மார்பு நிணநீர்ப் பெருங்குழாய் (Thoracic Duct)

மார்பு நிண நாளத்திற்கு இருகால்கள், வயிற்றுக் குழியின் உறுப்புகள், இடதுகை, மார்பின் இடது பகுதி, தலை, கழுத்து, முகம் போன்ற உறுப்புக்களிலிருந்து உற்பத்தியாகும் நிணநீர் வந்து சேர்கிறது.