பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் -- 113

பெற்றிருக்கிறது. வெளியிலிருந்து காற்றோடு உள்ளே வருகிற நோய்க்கிருமி களை, இது தடுத்து விடுகிறது.

தேவையான இரத்த ஓட்டம் இப் பகுதியில் தொடர்ந்து இருப்பதால், இரத்த ஒட்டமும், இந்தத் திரவமும் சேர்ந்து கொண்டு, வெளியிலிருந்து வருகிற காற்று எப்படிப்பட்டதாக இருந்தாலும் (உஷ்ணமாகவோ குளிராகவோ), அதனை உட்கொள்ளும் தேகத்தின் உஷ்ண நிலைக்கு ஏற்ப மாற்றி, ஏற்றுக் கொள்கிறது.

ஆகவே தான், மூக்கை ஏர்கண்டிஷனிங் மெஷின் என்று புகழ்கின்றார்கள்.

ஆமாம், காற்றை வெப்பப் படுத்த, தூசிகளைக் கட்டுப்படுத்த, கிருமிகளை நெட்டி அகற்ற, மூக்குக் குழி முழுதுமாகப் பயன்படுகிறது.

வாய்வழியாக மூச்சிழுத்தால் என்ன ஆகும் என்று கேள்வி கேட்பவர்கள் உண்டு. -

வாய் வழியாகக் காற்று உள்ளே வருகிறபோது, காற்று சுத்தம் அடைவதில்லை. வெப்பம் அடைவதில்லை. இதனால், மூச்சு உறுப்புக்கள் சேதாரம் அடைகின்றன. மார்புக் கூடு அரை குறை வளர்ச்சியைப் பெறுகிறது. உடல் வளர்ச்சியே இதனால் பாதிக்கப்படுகிறது. - 2. 6lsaavrgoc_ (Pharynx)

தொண்டையானது மூக்கிற்கும் குரல் வளைக்கும் நடுவில் உள்ள பகுதியாக அமைந்திருக்கிறது. நாம் சுவாசிக்கின்ற காற்றும், உண்ணுகின்ற உணவும், உள்ளே செல்கின்ற பொதுப் பாதையாக இது உள்ளது: - இந்தப் பொதுப் பாதையின் வழியாகவே காற்றானது குரல் வளைக்கும், உணவானது சோற்றுக் குழாய்க்கும் செல்கின்றன. -