பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

இதில் விஷேஷமான அம்சம் என்ன வென்றால், நாம்

உணவை உட்கொள்கிறபோது, சுவாசமானது சற்று

அடக்கப்பட்டு, உணவு உட்சென்றதும், சுவாசம் மீண்டும் தொடர்வது தான்.

இவ்வாறு இரண்டும் தனித் தனியே நடை பெறாத பொழுதுதான், துகள்கள் காற்றில் சிக்கி, செருமல் ஏற்பட்டு விடுகின்றது.

3. Sas6v606m (Larynx)

குரல் வளையின் எலும்பு குருத்தெலும்புகளால் ஆனது.

குரல் வளையின் எல்லாத் தசைகளுமே வரி கொண்டவை ஆகும்.

குருத் தெலும்புகளால் ஆன குரல்வளை மூடி, நாக்கின் பின்புறமாக இருக்கிறது. உணவை விழுங்குகிறபோது, இந்த மூடி (Epiglottis) குரல்வளை நுழை வாசலை மூடி, உணவை மூச்சு வழிப் பாதைக்குள் நுழைய விடாமல் தடுத்துத் தடை செய்து விடுகிறது.

சில நேரங்களில், வேண்டாதவைகள் குரல் வளைக்குள் போய் விடுகிற போது, மூச்சடைப்பு ஏற்படுகிறது. அதுவே உயிரைப் போக்கி விடுகின்ற அபாயத்தையும் உண்டாக்கி விடுகிறது.

குரல்வளையினுள் குரல் நாண்கள் உள்ளன. அவை எப்படி இயக்கப்படுகின்றன என்பதையும் காண்போம்.

குரல்வளை நாண்கள், தைராய்டு, அரிடினாய்டு என்கிற குருத்தெலும்புகளுக்கிடையே அமைந்து, குரல்வளை மூடியை இணைக்கின்றன. அவற்றில் நெகிழ்வு இணைப்பு திசு இழைகள் உள்ளன. அவை விரைத்த நிலையில் இருக்கும் போது, வெளியிலிருந்து வருகின்ற காற்று, அதிர்வை உண்டாக்குவதால் தான், சப்தங்கள் உண்டாகின்றன.