பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 115

நாக்கு, வாய்க்குழி உதடுகள், மூக்குப் பகுதி எல்லாமே பேசுவதிலும், சத்த்த்தை ஏற்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. -

4. esp Sg6 (Trachea)

டிரகியா என்று அழைக்கப்படுகிற மூச்சுக் குழல், ஏறத் தாழ 12 செ.மீ. நீளம் உள்ளது. - இது அரை வட்டக் குருத்தெலும்புகளால் ஆனது, இதன் பின்புறச் சுவர் மிருதுவானது. உணவுக் குழாயுடன் இது நெருக்கமாக அமைந்திருக்கிறது.

உறுதியாகவும், எப்பொழுதும் திறந்தே இருக்கும் இந்த மூச்சுக் குழல், மார்புக் கூட்டில் உள்ள 4வது அல்லது 5வது மார்பு முள்ளெலும்பு மட்டத்தில், இரண்டு மூச்சுக் கிளைக் குழல்களாகப் பிரிந்து செல்கின்றன.

5. மூச்சுக் கிளைக் குழல்கள் (Bronchi) -

மூச்சுக் குழலானது உட்புறம் நோக்கி 5 அங்குல நீளம் நேராக வந்த பிறகே, இரண்டு பிரிவாக அதாவது வலது, இடது மூச்சுக் கிளைக் குழல்களாகப் பிரிகின்றன.

இவை மீண்டும் பல சிறு சிறு கிளைகளாகப் பிரிந்து சென்று விடுகின்றன. ஒவ்வொரு சின்னஞ் சிறு கிளையின் நுனியும் அகன்றுள்ளன. அந்த சுவர்களில் தான் காற்றுப் பைகள் (Alveolai) உள்ளன. இந்த சுவர்கள் ஸ்கோமளப் எபிதீலியத் திசுவாலானவையாகும்.

இடது மூச்சுக் கிளைக் குழலை விட, வலது மூச்சுக் கிளைக் குழல் குட்டையாகவும் அகலமாகவும் இருக்கிறது.