பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 டாக்டர். எல. தவராஜ் செல்லையா

நுரையீரல்கள் (டungs)

அமைப்பு

நுரையீரல் லத்தீன் மொழியில் பல் மோ (Pulmo) என்றும், கிரேக்க மொழியில் நியுமோன் (Pneumon) என்றும் அழைக்கப்படுகிறது.

இதனால் தான், நுரையீரல்களின் இயக்கத்தை, ஆங்கிலத்தில் நியூமோனியா என்று அழைக்கின்றார்கள்.

நுரையீரலானது, இரண்டு பிரிவாகப் பிரிந்து, வலது நுரையீரல், இடது நுரையீரல் என மார்புக் கூட்டில் அமைந்துள்ளது. இந்த இரண்டு பிரிவுகளின் மொத்த எடை 2% பவுண்டாகும். (1.13 கிலோ கிராம்).

மார்புக் கூட்டினுள் முழுதுமாக இடம் பெற்றுள்ள நுரையீரல்களில், வலது நுரையீரல் இடது நுரையீரலை விட, சற்று அளவில் பெரிதாகக் காணப்படுகிறது. காரணம் என்னவென்றால், இடது புறத்தில் இருதயம் இருப்பதால், இடப்புற அளவு சற்று குறைந்திருப்பதாக அமைக்கப் பட்டிருக்கிறது.

நுரையீரலின் அமைப்பைப் பார்த்தால், ஒரு பூங்கொத்து போலவோ அல்லது ஒரு தேன்கூடு போலவோ தோற்றம் அளிக்கும். -

ஒவ்வொரு நுரையீரலும், கூர் உருளை வடிவம் கொண்டதாக விளங்குகிறது.

நுரையீரலின் இடமும் செயலும்

தொடர்ந்து உயிர்க்காற்றைத் தேவைக்கு மேலே பெற்றுக் கொள்கிற துல்லியமான பணியில் இயங்குகிற நுரையீரல்