பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 117

களின் இட அளவை நாம் அறிந்து கொள்ளும் போது, அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்து விடுகிறோம்.

நுரையீரலின் காற்றுக் கொள் அளவானது 800 முதல் 1000 சதுர அடி பரப்பளவாக (74மீ - 93 மீ) இருக்கிறது என்று கணக்கிட்டிருக்கின்றார்கள். இதை எப்படிச் சொல்லலாம் என்றால், ஒரு தேகத்தின் வெளிப்புறப் பரப்பளவை விட, 40 மடங்கு பரப்பளவு கொண்டது என்பதாகும்.

இன்னும் இதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு ஒர் உதாரணம். ஒரு டென்னிஸ் ஆடுகளத்தின் ஒரு பகுதி எந்த அளவு இடப்பரப்பு கொண்டதோ, அந்த அளவுக்குரியதாக இதன் பரப்பு இடம் பெற்றிருக்கிறது.

நுரையீரலின் மேல் உறை

நுரையீரல்கள், புளுரா(Pleura) எனும் மெல்லிய சவ்வுப் படலத்த்ால் மூடப்பட்டுள்ளன.

நுரையீரலைப் போர்த்துகின்ற புளுராவை உட்புற புளுரா என்றும், மார்புக்கூட்டின் உட்புறத்தைப் போர்த்துகின்ற புளுராவை, வெளிப்புற புளுரா என்றும் அழைக்கின்றார்கள். -

நுரையீரலுடன் ஒட்டிக் கொண்டிருக்கிற உட்புற புளுராவின் இரு மடிப்புகளுக்கு இடையேதான் புளுராக்குழி (Plueral Cavity) என்ற ஒரு பிளவுப்பகுதி அமைந்திருக்கிறது.

இக்குழியினுள் இருக்கும் குறைந்த அளவிலான திரவமானது, புளுராவின் இரு மடிப்புகளையும் ஈரம் கசிந்த நிலையில் வைத்திருந்து, மூச்சின்போது ஏற்படுகிற உரசல்களைக் குறைக்கின்றது.

இந்தப் புளுராவில் ஈரப்பசை இல்லாதபோது, அதாவது காய்ந்து உலர்ந்து போகிற போதுதான், இயக்கத்தில் உரசல்