பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

ஒர் இனம் அப்படியே உரித்து வைத்தாற்போன்ற உடல் ஒற்றுமையைப் பெற்றிருப்பது இந்தக் கருவளர்ச்சியால்தான். இந்தக் கரு வளர்ச்சியானது பரிணாமக் கொள்கைக்கு ஒர் எடுத்துக் காட்டாக இருக்கிறது என்றும் உதாரணம் காட்டுவார்கள். -

இந்தக் கருவுக்கு மட்டும் அல்ல, உடலுக்கும் அடிப்படை ஆதாரமாக இருப்பது செல் தான். இனி இந்த செல் பற்றிய முழு விளக்கத்தையும் விரிவாகக் காண்போம்.

செல்

உயிரினத்தின் வாழ்க்கைக்கு செல் (Cell) தான் அடிப்படை அமைப்பாகும். உயிர் வாழும் விலங்குகள், தாவரங்கள் எல்லாமே செல்களால் தான் உண்டாகியிருக் கின்றன. + செல்லின் அமைப்பு

தாவர செல்கள் பெரும்பாலும் ஒரே சீராக நாற்கோண வடிவம் கொண்டவையாக விளங்குகின்றன.

விலங்கின் செல்கள் பல வடிவம் கொண்டவை. அவை கோளமாகவோ அல்லது பட்டகம் போலவோ அல்லது நீண்டோ வால்போன்றோ அமைந்த வடிவமுடன் விளங்கு கின்றன. -

ஒரு செல்லின் இன்றியமையாத அடிப்படைக் குணங்களாக அமைந்திருப்பவை:

1. oloriosiro Laoru (Growth) 2. p oriaip @pair (Irritablity) 3. Qasr Quqoob (Reproduction) 4. உணர்ச்சிகளை ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்குக் கடத்துகின்ற பண்புகள்(Conductivity).