பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

ஏற்பட்டுவிட, ஒவ்வொரு முறை மூச்சு இழுக்கின்ற நேரத்திலும் வலியும் வேதனையும் உண்டாகி விடுகின்றது.

காற்றுப் பைகளும் கணக்கும்

நமக்குத் தேவையான உயிர்க் காற்றை நாம் பெற்றுக் கொள்ள, வெளியில் திரிகின்ற காற்றை, நாம் நிறையவே சுவாசிக்க வேண்டியுள்ளது.

பூமியின் மேற்பரப்பில் திரிகின்ற காற்றின் அளவைக் கணக்கிடுகின்ற விஞ்ஞானிகள், 5000 மில்லியன் மில்லியன் டன்கள் காற்று இருக்கிறது என்று கூறுகின்றார்கள்.

அந்த மொத்த அளவுக் காற்றில், பிராண வாயுவின் அளவோ 20.95 சதவிகிதம் தான் அமைந்திருக்கிறது.

மீதிக் காற்றின் பெயர்கள் - நைட்ரஜன். இந்த நைட்டிரஜன் உடன் ஆர்கன், கார்பன்டை ஆக்சைடு, ஹெலியம், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன், nனன் போன்ற காற்றுகள் கலந்துள்ளன.

நுரையீரல்களுக்கு உள்ளே, மில்லியன் கணக்காக, காற்றுப்பைகள் (Air Saes) அடங்கியிருக்கின்றன. ஒன்றின் மேல் ஒன்றாக மிக அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பது போன்ற அமைப்பில் இருக்கின்ற காற்றுப்பைகள், 600 மில்லியனுக்கு மேல் இருக்கும் என்பது ஒரு கணக்கு.

இனி, காற்றை உள்ளே இழுக்கும் முறையையும், வெளியே தள்ளுகிற விதத்தையும் சற்று விரிவாகத் தெரிந்து, கொள்வோம்.

உள்ளிழுக்கும் முறை

நாம் அடிவயிற்றை உள்ளே அழுத்துகிறபோது, அதனை ஒட்டி இறுக்கமாக அமைந்துள்ள உதரவிதானம் (Diaphragm)