பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

களுக்குள் செல்கிறது. இதையே காற்றுப் பரிமாற்றம் என்கிறோம். -

இந்தப் பணியை, திசு மூச்சு (விடல்), நுரையீரல் மூச்சு என இரண்டாகப் பிரித்துக் காட்டுவார்கள். அதனையும் தெரிந்து கொள்வோம்.

திசு மூச்சு -

திசுக்களில் நடைபெறுகின்ற காற்றுப் பரிமாற்றத்தையே

திசு மூச்சுவிடல் என்கிறார்கள்.

அதாவது, செல்களும், செல்லிடைப் பொருள்களும்

பிராணவாயுவைப் பெற்றுக் கொண்டு, கரியமில வாயுவை வெளிவிடுவதையே காற்றுப் பரிமாற்றம் என்கிறோம்.

நுரையீரல் மூச்சு

திசுக்களுக்குத் தேவையான பிராணவாயுவை இரத்தம் கொண்டு வந்து கொடுக்கிறது. திசுக்களின் உழைப்பினால் உண்டாகும் கரியமில வாயுவை எடுத்து வெளியேற்றுகிறது.

இவ்வாறு பிராணவாயு நிறைய வேண்டுவதும், தேங்குகிற கரியமிலவாயு அகற்றப்படுவதும், சதாகாலமும் நடந்து கொண்டிருக்கிற சமர்த்தான காரியமாகும்.

இடைவிடாத இந்த நிகழ்ச்சி நுரையீரலில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதையே நுரையீரல் மூச்சு என்கிறார்கள்.

சுற்றுப்புறப் பகுதியிலிருந்து, நுரையீரல்களுக்குப் புதிய புதிய காற்று கிடைத்துக் கொண்டிருந்தால்தான், நுரையீரல் மூச்சு நடைபெற உதவியாக இருக்கும். அப்போது, சிற்றறையில் உள்ள காற்றும் அகற்றப்பட வேண்டும். இதையே நுரையீரல் காற்றோட்டம் என்று கெளரவமாகக் கூறுகின்றார்கள்.

- -- .."