பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

அந்த வெற்றிடத்தை நிரப்பி, சமப்படுத்த, அங்கே காற்று உள்ளே வரவேண்டியிருக்கிறது. அந்த வேலையையே, உள்ளிழுக்கும் சுவாசம் என்கிறோம்.

இவ்வாறு நாம் ஒரு நாளைக்கு எவ்வளவு காற்று இழுக்கிறோம் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்து கூறியிருக்கின்றார்கள்.

ஒரு நாளைக்கு 3,000 கேலன்கள் (13,638 லிட்டர்) ஒரு வாரத்திற்கு 21,000 கேலன்கள் (95,466 லிட்டர்) ஒரு வருடத்திற்கு 1, 15 மில்லியன் கேலன்கள் (5,3 மில்லியன் லிட்டர்)

இவ்வாறாக, நமது சுவாச மண்டலம், சுகமாக, சுமுகமாகப் பணியாற்றிக் கொண்டு வருகிறது.

பூலோகத்தில் காற்று

நாம் வாழும் நல்லுலகத்தில், நிலவும் காற்றுப் பிரதேசத்தில் 5000 மில்லியன் மில்லியன் டன்கள் காற்று இடம் பெற்றிருக்கிறது. அந்த மொத்தக் காற்றில் 20.95 சதவிகிதம் தான், பிராணவாயு இருக்கிறது.

அதாவது காற்றின் மொத்த அளவில் 79 சதவிகிதம் நைட்டிரஜனும், 20.95 சதவிகிதம் பிராணவாயுவும், மீதி 0.05 சதவிகிதம் கரியமிலவாயுவும் இருக்கின்றன.

நாம் சுவாசித்து உள்ளே போய், மீண்டும் வெளியே வருகிற வெளி சுவாசக் காற்றில், 79 சதவிகிதம் நைட்டிரஜனும், 17 சதவிகிதம் பிராணவாயுவும், 4 சதவிகிதம் கரியமில வாயுவும் இருக்கின்றன.

இதில் உள்ள ஒரு சிறப்பம்சமானது, நாம் உள்ளே இழுத்து, உண்மையாகப் பெறுகிற இந்த உயிர்க்காற்றின்