பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 123

அளவு 3 சதவிகிதம் அளவு தான் இருக்கிறது. அப்படி யென்றால், நாம் எவ்வளவு ஆழ்ந்த மூச்சு இழுக்க வேண்டும்? இழுத்தாக வேண்டும் என்பதை நாம் எண்ணிப் பார்த்து, செயல்பட வேண்டும்.

சுவாசக் காற்றில் பிரிவுகள்

நாம் ஏறத்தாழ 500 கன சென்டி மீட்டர் அளவு, காற்றை உள்ளே இழுத்து வெளியிடுகிறோம். இதை இயற்கையாக ஏற்றுக் கொள்கிற காற்று (Tidal Air) என்கிறார்கள்.

நாம் முயற்சி செய்தால், 1500 கன சென்டி மீட்டர் அளவு காற்றை உள்ளே இழுக்கமுடியும். அவ்வாறு இழுக்கும் வலிமை பெறுகிறபோது, இந்தக் காற்றை உள்ளே பல நன்மைகளைக் செய்கிற நிலைமைக்கு வைத்துக் கொள்வதால், இதை உற்சாகம் ஊட்டும் நிரப்புக் காற்று (Inspiratory Reserve Volume) arsirip dapygairpriacir.

நுரையீரல்களுக்குள் காற்று நிரந்தரமாகத் தங்கிவிடக் கூடாது. தங்க விடவும் முடியாது. உள்ளே இழுத்த காற்று முழுவதையும், வெளியே அனுப்பி விடுகிற நுரையீரல் தான், சிறந்த தேர்ச்சியான திறமையான, நுரையீரல் என்று கூறப்படுகிறது.

உதாரணமாக, நாம் 1500 கன சென்டி மீட்டர் அளவு காற்றை உள்ளிழுத்தால், அந்த 1500 க.செ. அளவுக் காற்றை வெளியே அனுப்பி விட வேண்டும். அதை வெளியேற்றும் G&lfilli L13 &ng sol (Expiratory Reserve volume)

σΤζΤΤΙ ΙΠΤΠΤΦΗ, ΦΥΤ.

இவ்வாறு முயற்சி செய்து நிறைய காற்றை உள்ளிழுத்து, அதே அளவு நிறைய காற்றை வெளியே அனுப்புகிற விதத்தில் சுவாசித்தால், அதையே சுவாசத் திறன் (vital ca. pacity) என்று பெருமையாகப் பேசுவார்கள்.