பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 125

சிறிது சிறிதாக மறைந்து போவது போலவும், தேகம் உழைப்புக்கு ஒத்துக்கொள்வது போலவும், வலிகளிலிருந்து விடுபட்டுப் போகின்ற உணர்வும் ஏற்படும்.

இந்த நில்ை ஏற்பட்ட பிறகு, ஒட்டத்தில் உற்சாகமும், தேகத்தில் தெம்பும் திரும்பிவிடும். இந்தத் தெம் பு நிலையைத் தான், தேகத்தின் இன்ப நிலையத்தான், இரண்டாவது மூச்சு என்று அழைக்கிறோம்.

தேகத்தில் வேதனைகள் சேரும் என்றோமே! அவைகள் சில என்னென்ன? எப்படி எப்படி ஏற்படும் என்கிற விவரங்களை இங்கே காண்போம்.

1. சீராக நாடித் துடிப்பு இருப்பதில்லை. மனக்கட்டுப் பாடு இழக்கும் சூழ்நிலை அமைந்திருப்பதால், நாடித் துடிப்பில் வேகம் இருக்கும். அதனால், படபடப்பு புயல் நடை போட்டுக் கொண்டிருக்கும்.

2. உடல் ஏலாத நிலைக்கு ஆளாவதால், முகத்தில் வேதனை உணர்ச்சிகள் தலைவிரித்தாடும். அதனால் முகத் தசைகளில் ஒருவித விறைப்பும் இறுக்கமும் ஏற்பட்டுப் போகும். இந்த நிலைமையில், சுவாசிக்கின்ற செயலில் அதிவேகம் ஏற்பட்டு, அவதிக்குள்ளாக்கும்.

3. மார்புக் கூட்டை யாரோ அழுத்துவது போலவும், பெரும் வலி ஏற்படுவது போலவும் பிசைவது ப்ோலவும் அதிகமாக வேதனை உண்டாகும்.

4. தலையை நிமிர்த்தி வைக்கக் கூட தெம்பற்றுப்போய், தொங்கப் போட்டுக் கொள்கிற, தலை ஆடிப்போகிற, தொய்வு நிலையும் ஏற்படும்.

5. சில சமயங்களில் தசைகளில் வலியும் வேதனையும் மிகுந்து தெரியும். கால்களை ஒரடி கூட எடுத்து வைக்க முடியாது என்று நினைவில் தெரிகிறதடுமாற்றமும் ஏற்படும்.