பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

இருமலும் தும் மலும் தன்னிச்சையாக ஏற்படுவன. அனிச்சைச் செயல்களை ஏற்படுத்தும் இடங்கள் முகுளத்தில் உள்ளன.

இருமல்: குரல்வளை, முன்தொண்டை, அல்லது மூச்சுக் கிளைக்குழல் போன்ற உறுப்புக்களில், தூசிகள், உணவுப் பொருட்களின் துகள்கள் உள் சென்று விடுகிறபோது, அவற்றை வெளியேற்றவே இருமல் ஏற்படுகிறது.

ஆழ்ந்த உள்மூச்சிற்குப் பிறகு, தொடர்ந்து பின்னால் வரும் இருமல், காற்றுப் பாதைகளிலிருந்து, காற்றைக் கட்டாயமாகப் பலவந்தப் படுத்தி வெளியேற்றுகிறது. அந்த இருமல் வேகத்தில், உள்ளே சென்ற வேண்டாத பொருட்கள், விரைவாக வெளியேற்றப்பட்டு விடுகின்றன.

இருமல் நேரத்தில் ஏன் ஒருவித சத்தம் ஏற்படுகிறது? உள்காற்று வேகமாக வெளியேற்றப்படுகிறபோது, வெளியேறும் காற்று குரல் நாண்களை அதிர்வடையச் செய்து விடுகிறபோது, இத்தகைய இருமல் சத்தம் ஏற்பட்டு விடுகிறது.

தும் மல்: மூக்கின் உள்ளேயிருக்கும் சளிப்படலம், ஏதாவது வேண்டாத பொருட்களால் உறுத்தப்திடுகிறபோது, தும் மல் ஏற்பட்டு விடுகிறது. இருமல் ஏற்படுவது போலவேதான் தும்மலும்.

ஆனால், தும்மலின் போது, காற்று வெளியேறும் வேகம், மிக மிக அதிகமானது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கின்றார்கள்.

ஒருவர்.தும்முகிறபோது, மூக்கிலிருந்து வெளியேறுகிற சளி போன்ற பொருளானது, 20 அடி தூரத்திற்கு மேல் போய் விழுகிறது என்பது ஒரு கண்டுபிடிப்பு.