பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 டாக்டர். எஸ். தவராஜ் செல்லையன

ஜீரண மண்டல்ம்

உணவும் உதவியும்

உணவைப் போல, உடலுக்கு உதவி செய்யும் சுவையான பொருட்கள் உலகத்தில் வேறெதுவுமே இல்லை.

உணவை உட்கொள்ளாத உடல் தேய்வடைகிறது. களைப் படைகிறது. கொஞ்சங் கொஞ்சமாக நலிந்து, உயிரையும் இழந்து விடுகிறது. எனவே, உணவுதான் உடலுக்கு சக்தியைத் தருகிறது. வளர்ச்சியை அளிக்கிறது. தேய்ந்த திசுக்களைப் பழுது பார்க்கிறது, பராம்ரிக்கிறது.

ஜீரண மண்டலம்

உடலுக்கு நிறைய வேண்டும் என்று உண்மையான ஆர்வத்துடனும் ஆவேசத்துடனும், உட்கொள்கிற உணவு களை, அப்படியே உடல் ஏற்றுக் கொண்டு விடுவதில்லை. அவற்றை தேகம் ஏற்றுக் கொள்கிற தன்மையிலே, பக்குவப்படுத்தி, பதப்படுத்தி, இதமான அமைப்போடுதான் இணைத்துக் கொள்கிறது.

அதாவது, செல்கள் சிறப்பாகப் பயன்படுத்தும் வண்ணம் செழிக்கும் முறையிலே, சில மாற்றங்களை உடல் செய்து கொள்கிறது. எனவே, வாயில் விழுகிற உணவைச் சுவைப்பதிலிருந்து, அவை ஒவ்வொரு உறுப்பிலும் போற்று தற்குரிய மாற்றத்தை ஏற்படுத்தி, உணவை செரிக்கச் செய்து, செரித்தவைகளை உறிஞ்சி, இரத்தத்தில் சேர்க்கும் வரை உண்டாக்கிவிடும் மாற்றத்தையே ஜீரணித்தல் என்று கூறுகிறோம். - -

இந்த ஜீரணத்திற்கு உதவுகின்ற உறுப்புக்களின் கூட்டத்தையே ஜீரணமண்டலம் என்று அழைக்கிறோம்.