பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 137.

உணவை அரைக்க:

உணவுப் பொருட்களை அரைப்புதற்கு, கீழ்த்தாடைகள் உதவுகின்றன.

அந்தக் கீழ்த்தாடைகள் அசைவதற்கு, நான்கு வித தசைகள் உதவுகின்றன. அவற்றின் பெயர்கள் கீழே தரப் பட்டுள்ளன. (9) @Libungs gangscir (Temporal Muscle) (o) dir’s Ligangscir (Masseter Muscle) (இ) இன்டெர்னல் டெரிகாய்ட் தசைகள் (Internal

Pterigoid) (ஈ) எக்ஸ்டெர்னல் டெரிகாய்ட் தசைகள் (External

Pterigoid) இந்தத் தசைகளே கீழ்த்தாடையை மேலும் கீழும் அசைக்க வைத்து, உணவினை அரைத்திட உதவுகின்றன. உமிழ்நீர்ச் சுரப்பிகள் (salaiva)

உமிழ்நீர் என்பது காரமான திரவமாகும். இதில் 98.5 முதல் 99 சதவிகிதம் வரை தண்ணீரும்; 1 முதல் 1.5 சதவிகிதம் மற்றப் பொருட்களும் அடங்கியுள்ளன.

உமிழ் நீரில் மியூசின் என்ற கணிப்பொருளும், மால் டோன் என்ற நொதிப் பொருளும் இருக்கின்றன். இவைகளே உணவில் உள்ள மாவுப் பொருட்களின் மீது இரசாயண மாற்றம் புரிந்து, மால்டோஸ் (Maltose) என்னும் எளிய சர்க்கரையாக மாற்றிவிடுகின்றன.

உமிழ்நீர்சுரப்பிகள் எண்ணிக்கையும் இடமும்:

மொத்தம் 3 ஜோடி உமிழ்நீர்ச்சுரப்பிகள் உள்ளன.