பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

1. பரோடிட் உமிழ்நீர்ச்சுரப்பி (Parotid glands)

இச்சுரப்பிகள், உமிழ் நீர்ச் சுரப்பிகளிலேயே பெரிய சுரப்பியாகும். இவை, பக்கத்திற்கு ஒன்றாகக் காதிற்கு முன்புறத்தில், கீழாக அமைந்திருக்கின்றன. இச்சுரப்பிகள், பரோடிட் குழாய் வழியாக, கன்னத்தினுள்ளே இருக்கும் இரண்டாவது கடைவாய்ப் பல்லின் எதிர்ப்பக்கத்தில் சுரக்கின்றன.

2. GeoGgagoc— 9/(g.&gUcF (Sub-maxillary glands)

தாடை எலும்பின் கீழ்ப்பாகத்தில், பக்கத்திற்கு ஒன்றாக இச்சுரப்பிகள் அமைந்துள்ளன. இதன் குழாய்கள் வாய் முகப்பின் மேற்பரப்பில் இருக்கின்றன. இச்சுரப்பிகள் சுரக்கின்ற உமிழ்நீர் சப்மேக்கிலரி குழாய் மூலமாக, வாய்க் குழிக்குள் வந்து கலக்கின்றன.

3. Gaeg sygst gcfesoi (Sub-lingual glands)

இச்சுரப்பிகள், பக்கத்திற்கு ஒன்றாக, வாயின் அடிப்பாகத்தில், நாக்கின் கீழ்ப்பக்கமாக அமைந்துள்ளன. இச்சுரப்பிக்கு ஒரு பெரிய குழாயும், பல சிறிய குழாய்களும் உள்ளன. இந்த உமிழ் நீரானது, பல குழாய்கள் மூலமாக, வாயின் அடிப்பாகத்திற்கு வந்து சேர்கின்றன.

எவ்வளவு சுரக்கிறது?

ஒரு நாளில், ஒரு மனிதன் 1 முதல் 1.5 லிட்டர் வரை உமிழ்நீரைச் சுரக்கிறான்.

எவ்வாறு உமிழ்நீர் அதிகமாகச் சுரக்கிறது? ஏன்? என்ற பல கேள்விகளுக்கு விடை காண, பாவ்லோவ் என்ற விஞ்ஞானி முயன்று சில உண்மைகளை உலகுக்கு அறிவித்தார். அவர் ஆய்வுக்கு நாய்கள் உதவின.