பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

ஹையோ கிளாஸ்ஸி, ஜீனியோ கிளாஸஸ், ஸ்டைலோ கிளாஸஸ் எனும் தசைகள் அனைத்துமே, நாக்கில் முடிகின்றன. இந்தத் தசைகளே நாக்கை முன்னும் பின்னுமாக, மேலும் கீழுமாக அசைத்து இயக்குகின்றன. சுவையும் உணர்வும்

நாக்கின் மேற்பரப்பில் பாபில்லே (Papillae) எனப்படுகிற காம்பு போன்ற அரும்புகள் உள்ளன.

இந்த பாபில் லேக்கள் நான்கு வகையாக அமைந்

துள்ளன. 1. பைலிபார்ம், 2. பாங்கிபார்ம், 3. வல்வேட், 4. போலியேட். -

பைலிபார்ம் அரும்புகளுக்குத் தொடு உணர்வு உண்டு. இவை நாக்கின் ஒரங்களில் காணப்படுகின்றன.

மற்ற மூன்று அரும்புகளுக்கும் சுவை உணர்வு உண்டு. இந்த அரும்புகளால் தான், நாக்கு வெல்வெட் போன்ற அமைப்பு கொண்டுள்ளது. + நாக்கு அடித்தளத்தின் சளிப்படலத்தில் உள்ள நீளத் திசுத்திரனையே, நாக்கு டான்சில் என்கின்றனர். நாக்கின் உதவியும் பணியும்:

1. உண்ணும் உணவின் சுவை அறிய உதவுகிறது. 2. உரையாடி மகிழ உதவுகிறது (பேசுவதற்கு).

3. உணவுப் பெர்ருட்களை நன்கு கலக்கி, விழுங்குகிற போது, உணவுக் குழலுக்குள் செல்ல, உதவி செய்கிறது.

4. பற்களிடையே தங்கியிருக்கும் உணவுத் துகள்களை

அகற்றும் பணியில் உதவுகிறது.