பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 145

இந்தப் பற்கள், ஏழாவது வயதிலிருந்து விழ ஆரம்பித்து விடும். அவ்விடங்களில் நிலையான பற்கள் முளைத்து வரும்.

606vayogos ooch (Permanent Teeth):

நிரந்தரப் பற்கள் 7 முதல் 14 வயதிற்குள் முளைத்து விடுகின்றன. அறிவுப்பல் (Wisdom Teeth) மட்டும் 17 முதல் 30 வயதுக்குள் முளைத்து விடுகிறது.

முதலில் கடைவாய்ப் பற்கள்; அடுத்து நடு வெட்டுப் பற்கள்; பிறகு நடு விலகிய வெட்டுப் பற்கள்; பிறகு முதல் கடைவாய் முன் பற்கள்; பிறகு கோரைப் பற்கள்; இரண்டாவது கடைவாய் முன்றபற்கள்; இரண்டாவது கடைவாய்ப் பற்கள் இறுதியில் அறிவுப் பற்கள் என்பதாக, ஒன்றன் பின் ஒன்றாக, நிரந்தரப் பற்கள் முளைத்து வருகின்றன. -

பற்களும் பயன்களும்

எனவே, மனிதனின் பற்கள், இரண்டு தடவை முளைக்கின்றன என்பதை இங்கே சிந்தித்துப் பார்த்து மகிழலாம். பற்கள் அதன் படிவத்தைப் பொறுத்து, பலவாறாகப் பிரிக்கப்படுகின்றன.

(அ) வெட்டும் பற்கள் (incisors):

மேல் தாடையிலும், கீழ்த்தாடையிலுமாக, எட்டுப் பற்கள் இருக்கின்றன. வெட்டுப் பற்களின் சிகரமான மேற்பாகம், உளிபோன்று அமைந்திருக்கும், ஒற்றை வேர் உடைய, வெட்டுப் பற்கள், உணவுப் பொருள்களைக் கடிப்பதற்கும், வெட்டுவதற்கும் உதவுகின்றன.