பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 1.49

மேல் பக்கத்தில் உணவுக் குழாயிலிருந்து இரைப்பைக் குத் திறக்கின்ற திறப்பிற்கு &minutr pu (Cardiac opening) என்றும்; சிறுகுடலுக்குச் செல்வதற்காகத் திறக்கின்ற கீழ்ப்பக்கத்தின் திறப்பு பைலோரிக் திறப்பு(Phloric opening) என்றும் அழைக்கப்படுகின்றன.

இரைப்பையின் உறைகள்

1. மியூகஸ் உறை: (Mucous Coat) இது மிருதுவானது. அதிகமான கனமும் மடிப்புக்களையும் உடையது. இந்த மடிப்புகளுக்கு ரூ.கே (Rugae) என்று பெயர்.

இந்த மியூகஸ் என்கிற உள் உறையில் இருவிதமான செல்கள் உள்ளன. ஒன்றின் பெயர் சீப் (Chief); இந்த சீப் செல்கள் அதிகமான எண்ணிக்கையில் இருக்கின்றன. அவை பெப்சின்(Pepsin); ரெனின்(Renin) என்ற என்சைம்களை(Enzyme) சுரக்கின்றன. -

இரண்டாவது வகையான செல்கள் பாரிட்டல் (Parietal) என்பதாகும். பாரிட்டல் செல்கள், ஹைடிரோ குளோரிக் அமிலத்தைச் சுரக்கின்றன. -

ஹைடிரோகுளோரிக் அமிலத்தின் தனிச் சிறப்பானது, இதன் காரத்தன்மைக்கு முன்பாக, எந்த விஷக் கிருமிகளும் உயிர்வாழ முடியாது. அதனால்தான், வயிற்றுப்பகுதி எப்பொழுதும் பாதிக்கப்படாத பாங்கினைப் பெற்றிருக் கிறது. அதாவது, மற்ற உடல் பகுதிகளைப் போல் அடிக்கடி பாதிக்கப்படாத தன்மை வயிற்றுக்கு இருப்பதற்குக் காரணம், இந்த அமிலத்தின், அதிகமான சிறப்புக் குணத்தாலேயாகும்.

வயிறு தன்னைத்தானே வலிமையாக வைத்துக் காத்துக் கொண்டு, சிறப்பாக செயல்படும் குறிப்பை இங்கே நாம் அறிந்து மகிழலாம். -