பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 151

முன்னும் பின்னும் தள்ளப்படுகின்றன. இந்த இயக்கத்தில் போது, ஜீரண நீரும் உணவுடன் நன்கு கலந்து கொண்டு, பலவித மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

1. பெப்சினும் ஹைடிரோ குளோரிக் அமிலமும் சேர்ந்து கொண்டு, புரோட் டின் சத்தினை (Protein) பெப்டோனாக (Peptono) மாற்றுகிறது.

2. ரெனின் எனும் சுரப்பி நீர் பாலில் உள்ள கேசினோஜன் என்னும் பொருளை கேசின் (Casein) என்று தயிராக மாற்றுகிறது.

3. கேஸ்டிரிக் லைப்பேஸ் எனும் சுரப்பி நீர், சிறிதளவே சுரப்பதால், கொழுப்புப் பொருட்கள் சிறிதளவே மாற்றமடைகின்றன. இவ்விதம் மாற்றம் பெறுகின்ற உணவுப் பொருட்கள் கைம் (Chyme) என்று அழைக்கப்படுகிறது.

இந்த கைம், பைலோரிக் திறப்பின் மூலம், சிறு குடலுக்குள் செல்கிறது. இப்படிச் செல்கிற கைம், சிறிது நேர இடைவேளைக்கு ஒரு தடவை, சிறுகுடலுக்குள் அனுப்பப் படுகிறது. -

&\pi(5Leo (Small Intestine)

அமைப்பும் அளவும்

சிறுகுடல் அமைப்பு, ஒரு குழல் வடிவமாக அமைந்திருக்கிறது. அதன் நீளம் 5 முதல் 7 மீட்டர் நீளம் இருக்கும். சுருளாக சுருண்டிருக்கும். சுமார் 20 அடி நீளம் என்று கூறுவர்.

சிறுகுடல் 3 பகுதிகளாக அமைந்திருக்கின்றது.