பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 153

ஒரு குடலுறிஞ்சி 1 மி.மீ. நீளம் இருக்கும்.

மொத்தத்தில், சிறுகுடலில் நான்கு மில்லியன் அளவு குடலுறிஞ்சிகள் இருக்கின்றன. -

குடல் துவாரத்தில், தூண் போன்ற எபிதீலியத்தால், குடலுறிஞ்சிகள் மூடப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடலுறிஞ்சி யின் மத்தியிலும், ஒரு மூடப்பட்ட நிணநீர்க் குழாய் காணப்படுகிறது. அதற்கு லாக்டியஸ் குழாய் என்று பெயர்.

குடலுறிஞ்சிகளில், மிருதுதசை இழைகளும், நரம்பு இழைகளும் காணப்படுகின்றன. இந்தக் குடலுறிஞ்சிகள் வழியாகவே, போஷாக்குப் பொருட்கள், இரத்தத்தின் உள்ளும், நிணநீரின் உள்ளும் செல்கின்றன.

டியோடினத்தின் முன்புறத்திலும், ஜிஜூனம், இலியம் முழுவதிலும், பெரிடோனிய உறை காணப்படுகிறது.

கல் லீரல் (Liver)

கல்லீரல் ஒரு பெரிய உறுப்பாகும். இதன் எடை 1.5 கிலோ கிராம் ஆகும். - -

இது, வயிற்றுக்குழியின் மேற்புறத்திலும், வலதுபுறத் திலும், ஓரளவு இடப்புறங்களிலும் அமைந்திருக்கிறது.

கல்லீரலின் மேற்புறப்பரப்பு உதரவிதானத்தை ஒட்டியும், கீழ்ப்புறப்பரப்பு இரைப்பையையும் முன் சிறு குடலையும் நோக்கி அமைந்திருக்கிறது. - கல்லீரலின் பயன்கள்:

1. ஜீரண நிகழ்ச்சியில் பங்கு கொள்கிற பித்தநீரை கல்லீரல் சுரந்து தருகிறது.

2. மாவுப்பொருள், கொழுப்பு, புரதம் ஆகியவற்றின் வளர்சிதை மாற்றத்தில் பங்கு கொள்கிறது.