பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

3. சிறுகுடலிலிருந்து இரத்தத்தினுள் கிரகிக்கப்பட்டப் போஷாக்குப் பொருட்கள், போர்ட்டல் சிரைமூலம், கல்லீரலுக்குள் செல்கின்றன. இரத்தத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட குளுகோஸ், கல்லீரலில் கிளை கோஜனாக மாற்றப்படுகிறது.

4. கல்லீரல் செல்களில், கிளைகோஜன் ஒரு சேமிப்புப் போஷாக்குப் பொருளாக இருக்கிறது.

- 5. கல்லீரலில் உள்ள கிளைகோஜன் குளுகோஸாக உடைபட்டுப்போய், இரத்தத்தில் கலப்பதால், இரத்தத்தில் குளுகோஸின் அளவு, மாறாமலே இருந்து வருகிறது.

6. உணவில் கொழுப்புப் பற்றாக் குறை ஏற்படுகிற போது, கல்லீரலிலுள்ள மாவுப்பொருட்களைக் கொழுப்புப் பொருளாக மாற்றுவதன் மூலம், கொழுப்பு வளர்சிதை மாற்றத்தில், கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது.

7. புரத வளர்சிதை மாற்றத்திலும், கல்லீரல் பங்கு கொள்கிறது. கல்லீரலில் உள்ள உபரியான புரதப் பொருள், மாவுப் பொருளாக மாற்றப்படுகிறது.

8. சில நச்சுப்பொருட்களை தீங்கற்றதாக ஆக்கும் தன்மை கல்லீரலுக்கு இருப்பதால், இது தேகத்தின் தற்காப்புப் பணியிலும் சிறப்பான பங்கு வகித்து வருகிறது.

கல்லீரலில் உள்ள பித்த நீர்ப்பையில் தான், பித்த நீர் தேங்கியிருக்கிறது. இந்தப் பையிலிருந்து பித்த நீர், சிறு குடலுக்குள் போகிறது.

&606007two (Pancreas)

கணையமானது, இரண்டாவது பெரிய ஜீரண சுரப்பியாக விளங்குகிறது. இது பின்புற வயிற்றுச் சுவரின் மேலாக, இரைப்பைக்குப் பின்னால் அமைந்துள்ளது.