பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

குடலில் காரங்கள் கலப்பதால், கிளிசரினாகவும், கொழுப்பு அமில உப்புக்களாகவும் மாறுகின்றன. இவற்றை குடலுறிஞ்சிகள் உறிஞ்ச, அவற்றின் தந்துகிகளின் வழியாக, நிணநீரை அடைகின்றன.

3. தண்ணிர், காராயம், உப்பு போன்ற பொருட்கள் இரைப்பையால் கிரகிக்கப்படுகின்றன.

4. தண்ணீரின் பெரும் பகுதியும், மாவுப் பொருட்களும் பெருங்குடலால் கிரகிக்கப்படுகின்றன. -

பெருங்குடல்

சிறுகுடலின் கடைசிப் பகுதியான இலியம் எனும் கடைச் சிறு குடல், பெருங்குடலுடன் இணைகிறது. இங்கு இலியோ சீக்கல் வால்வு என்ற ஒன்று இருக்கிறது. - சிறுகுடலிலிருந்து பொருட்கள் பெருங்குடலுக்கு எளிதாகப் போகவும்; பெருங்குடலிலிருந்து சிறுகுடலுக்குத் திரும்பவும் மேலேறி வராமலும், இந்த வால்வு தடுக்கிறது.

பெருங்குடலின் நீளத்தை 1.5 மீட்டர் (5 அடி) என்று கூறுவார்கள். இது, சிறுகுடலின் நீளத்தை விட 15 அடி குறைவு என்பார்கள். -

பெருங்குடலின் அகலம் 2% அங்குலம். இது சிறுகுடலின் அகலத்தை விட 3 மடங்கு பெரியது.

இது கேம் (Caecum), மேலேறு குடல் (colon); மலக் குடல் (Rectum) என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக் கிறது. - *

சீகம் : பெருங்குடலுடன், சிறு குடல் சேருகிற

இடமானது ஒரு பைபோல் அமைந்திருக்கிறது. சீகத்தின் அடியில் தான் குடல் வால் (Appendix) இருக்கிறது.