பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 159

குடல் வாலின் பருமன் 1 செ. மீட்டருக்கு அதிகமாக இராது. இதன் நீளம் 7 முதல் 9 செ.மீ. இருக்கும்.

குடல்வாலின் சுவரில் ஏராளமான நிணநீர்க் கழலைகள் காணப்படுகின்றன. -

கோலன்: இது மேலேறு குடல் என்று அழைக்கப் படுகிறது. ஏறுகுடல், குறுக்குக் குடல், கீழிறங்கு குடல் என மூன்று பாகங்களாகப் பிரிக்கப் பட்டிருக்கிறது.

மலக்குடல்: வளைந்துள்ள பெருங்குடலின் தொடர் பாக, மலக்குடல் உண்டாகியிருக்கிறது. மலக்குடல் குதமாக (Anus) முடிகிறது.

பெருங்குடலின் ஜீரண அமைப்பு

ஜீரணம் ஆகாத மீதமுள்ள உணவுப் பொருட்கள், சிறு குடலில் இருந்து பெருங்குடலுக்குள் செல்கிறது.

த்ண்ணிர் கிரகிக்கப்படுவதும், மலம் உருவாவதும் இந்தப் பெருங்குடலில் பிரதான வேலையாக நடை பெறுகிறது.

தினமும் ஏறத்தாழ 4 லிட்டர் தண்ணீர் அளவு, பெருங் குடலால் கிரகிக்கப்படுகிறது.

பெருங்குடலின் சுவரும் சிறுகுடலைப் போன்று நான்கு அடுக்குகள் உடையது என்றாலும், இதன் உள் அடுக்கில் குடலுறிஞ்சிகள் கிடையாது.

வெளியேறும் மலத்தின் அளவையும் கணித் திருக் கின்றார்கள்.

மேலைநாட்டில் உள்ள மக்களின் சராசரி வெளிே யற்றும் மலத்தின் எடை 100 கிராம். ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் வாழ்கிற மக்கள் வெளியேற்றும் மலத்தின் சராசரி எடை 500