பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 161

இதைச் சிறப்பாக நிறை வேற்றிட உடற்பயிற்சிகளே உதவுகின்றன. இந்த செயலைத்தான் வளர்சிதைமாற்றம் (Metabolism) Ergirl IITgir.

3. விருப்பமான வேலைகளில் ஈடுபடவும், விளை

யாட்டுக்களில் பங்கு பெறவும், உடற்பயிற்சிகளில் கலந்து கொள்ளவும் கூடிய வலிமையை உணவுதான் அளிக்கிறது. உற்சாகப்படுத்துகிறது.

நேரத்திற்கு உணவு உட்கொள்ளாமல், கண்ட நேரத்தில் சாப்பிடுவதும்; இனிப்புப் பொருட்களை அளவுக்கு மீறி சாப்பிடுவதும் போன்ற காரியங்கள், ஜீரண மண்டலத்தைப் பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கும். அது உடலையும் மந்தப்படுத்தும்.

இவ்வாறு உடல் பாதிக்கப்படாமல், உயர்ந்த திறன்களில் திளைக்க, உடற்பயிற்சிகள் உதவுகின்றன.

4. ஜீரண உறுப்புக்களை செழுமைப்படுத்துவதால், கழிவுப் பொருட்களை விரைந்து வெளியேற்றும் வலிமை யையும், வல்லமையையும் வழங்குகிறது. - -

5. மலச்சிக்கல் ஏற்படாத ஒரு மகிமையை உடற்பயிற்சி உண்டுபண்ணுகிறது.

6. உடற் பயிற்சிகள், வயிற்றிலுள்ள இரத்தக் குழாய்களை அழுத்தி, சுருங்கி விரியச் செய்கின்றன. அதனால்தான், வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு, உடற்பயிற்சிகளை செய்யக் கூடாது என்று வல்லுநர்கள் வற்புறுத்துகின்றார்கள்.

7. உடற் பயிற்சிகள் வயிற்றினை விரிவடையச் செய்யாமல், தொந்தி வந்து விடாமல், கவனமாகக் காத்து, நிமிர்ந்த தோற்றத்தையம், அழகான உடலமைப்பையும் அளிக்கின்றன. - -