பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

பாது காத்துக் கொள்வதற்கு; காதல் உணர்ச்சி பெறுவதுபோன்ற காரியங்களைச் ச்ெய்திட ஹார்மோன்கள் உதவுகின்றன.

இத்தகைய ஹார்மோன்களைச் சுரக்கின்ற சுரப்பிகள் யாவும், தங்களது சுரக்கும் நீரைக் கொண்டு செல்ல, தகுந்த நாளங்கள் (குழாய்கள்) இல்லாமல்; இரத்தத்திலும் அல்லது நிணநீரிலும் நேரடியாகக் கலக்குமாறு செய்து விடுகின்றன.

இவ்வாறு நாளமில்லாமல் சுரக்கும் சுரப்பிகள் பல உண்டு.

எல்லா நாளமில்லா சுரப்பிகளின் பணிகளும் ஒன்றோடொன்று இணைந்தே உள்ளன. இந்தச் சுரப்பிகள் அனைத்தும் ஒரே அமைப்பாக, ஒரு முகமாகப் பணி

புரிவதால்தான், இதை நாம் நாளமில்லா சுரப்பி மண்டலம்

என்று கூறுகிறோம்.

இரண்டு வகை

நமது உடலில் உள்ள சுரப்பிகள், பல விஷேஷமான

பொருட்களை அல்லது திரவத்தை சுரக்கின்றன என்று நாம் அறிவோம்.

இவற்றை இரண்டு வகையாகப் பிரித்துக் கூறுவார்கள்.

1. வெளிப்புற சுரப்பிகள் (Exocrine)

2. உட்புற சுரப்பிகள் (Endocrine)

வெளிப்புற சுரப்பிகளுக்குரிய உதாரணம். வாய், வயிறு, குடற்பகுதி போன்றவற்றில் சுரக்கின்ற நீர்கள், இவை உணவுப் பாதையில் வந்து கலந்து கொள்கின்றன.

வியர்வை, கண்ணிர் போன்றவற்றை சுரக்கும் சுரப்பிகள்,

சுரந்த நீரை உடலின் வெளிப் புறத்திலேயே விழவிடுவதை நாம் பார்கிறோம்.