பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

6. LImab Q)ar #Ju? (Sex Gland)

7. & Gogoru &J'il 5 (Pancreas Gland)

8. l staflugb ggulil $ (Pineal Gland) 1. பிட்யூட்டரி சுரப்பி

பயிறு வடிவத்தில் அல்லது சிறு முட்டை அளவாக, பிட்யூட்டரி சுரப்பி அமைந்திருக்கிறது. இதன் எடை 0.5 கிராம் உள்ளது.

மூக்கு, கண்களுக்குப் பின் புறமாக, சிறுமூளைக்கு அடியில், கபாலக் குழியில் பிட்யூட்டரி அமைந்துள்ளது. இந்தச் சுரப்பி ஒரு சிறு காம்பு போன்ற பாகத்தால், சிறு மூளையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. -

“பிட்யூட்ட்ரி சுரப்பி சுரக்கின்ற ஹார்மோன்கள், எல்லா நாளமில்லாச் சுரப்பிகளும் தங்கள் பணியை திறமையாகச் செய்யத் தூண்டுவதால், இதனை, நாளமில்லா சுரப்பிகளின் தலைவன் (Master Gland) என்று கூறுகின்றார்கள்.

பிட்யூட்டரி சுரப்பியை இரண்டு பகுதியாகப் பிரிக்கலாம். (அ) சுரப்பியின் முற்பகுதி (ஆ) சுரப்பியின் பிற்பகுதி.

சுரப்பியின் முற்பகுதியானது, மற்ற சுரப்பிகளைக் கட்டுப்படுத்துகின்ற ஹார்மோன்களை சுரக்கும் பெருமையைப் பெற்றிருக்கிறது. முற்பகுதி சுரக்கும் திரவத்திற்கு டிராபிக் ஹார்மோன்கள் (Trophic Harmones) என்று பெயர்.

இந்த ஹார்மோன்களுக்குரிய பெயர்கள் பின்வருமாறு.

(அ) வளர்ச்சி ஹார்மோன் (Growth Harmone), இது உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. ஹார்மோன்