பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 169

வளர்சிதை மாற்றத்தில் குறிப்பாக, திசுக்களில் புரதத் தொகுப்பைப் பாதித்துப் பணியாற்றுகிறது.

(ஆ) தைராய்டு ஊட்ட ஹார்மோன் (Thyrotrophin), இது தைராய்டு சுரப்பியின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது.

(இ) அட்ரீனல் ஊட்ட ஹார்மோன் (Adrenocortieotrophic Harmone), இது அட்ரீனல் சுரப்பிகளின் பணியைத் துண்டுகிறது.

(ஈ) இனப் பெருக்க ஊட்ட ஹார்மோன்கள் இது இனப் பெருக்கச் சுரப்பிகளின் மீது வினையாற்றித் தூண்டுகிறது.

பிட்யூட்டரி முன்பகுதி சுரக்கின்ற திரவம், சீர்கெட்ட முறையில் அமைகிறபோது, உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து விடுகின்றன.

பிட்யூட்டரி சுரப்பி மிகையாகச் சுரக்கும் போது, தேக வளர்ச்சியில், ராட்சசத் தன்மையை உண்டாக்கி விடுகிறது. இப்படி ஏற்படுகிற வளர்ச்சி ஏறத்தாழ 9 அடி உயரத்திற்கும் வளர்த்து விடுகிறது. அமெரிக்காவில் உள்ள ராபர்ட் வாட்லோ என்பவரின் உயரம் 8 அடி 11 அங்குலம் என்பதாக சரித்திரம் கூறுகிறது. அவரது எடை 220 கிலோ. அவரது பாதத்தின் அளவு 20 அங்குலம்.

பிட்யூட்டரி சுரப்பியின் சரியில் லா சுரப்பானது, தேகத்தின் வளர்ச்சியை சீரழித்து விடுகிறது. ஆமாம், வளர்ச்ச்சியை வீழ்த்தி, வடிவத்தில் குள்ளர்களாக ஆக்கி விடுகிறது.

சார்லஸ் எப்டிரேட்டன் எனும் மனிதரை கட்டைவிரல் மனிதன் என்று செல்லமாக அழைக்கின்றனர். அவரின் உயரம் 3 அடி. அவரைவிட இன்னும் குள்ளமாக ஆட்கள் இருக்கின்றார்கள் என்றும் கூறுகின்றார்கள்.