பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17Ο . டாக்டர். எஸ். நவர்ாஜ் செல்லையா

பிட்யூட்டரி பின்பகுதி சுரக்கின்ற திரவத்திற்குரிய

பெயர்கள்.

(அ) ஆக்ஸிடோசின் (Oxytocin) (4) GaiGamingstair (Vasopression)

ஆக்ஸிடோசின் திரவமானது, பலவீனமான பிரசவத்தை பலம் அடையச் செய்கிறது.

வே சோபிரசின் இரத்த நாளங்களை, குறிப் பாக கர்ப்பப்பையின் இரத்த நாளங்களை, சுருங்கச் செய்து, சிறுநீரைப் பிரிக்கும் செயலில், வினைபுரிகின்றது.

இவ்வாறு சிறு நீரைப் பிரிக்கும் பணியை ஊக்குவிக்கிற ஹார்மோனின் சுரப்புக் குறைவதால், பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் ஏற்படுகிற நோய்க்கு டயபெட்டிஸ் இன்சிபிடஸ் என்று பெயர்.

இந்த நோய் ஏற்பட்டால், அதிகமான தாகம் ஏற்படும். பெரும் அளவில் சிறு நீர்கழியும். அதிகமானதாகம் என்றால், 20 முதல் 30 லிட்டர் வரை தண்ணிர் குடிப்பது என்பது தான் இந்த வியாதியின் மகத்துவம்.

2. தைராய்டு சுரப்பி

தைராய்டு சுரப்பி, கழுத்தின் முன் பரப்பில் அமைந் துள்ளது. இதன் எடை 1 அவுன்சு, அதாவது 28 கிராம். சில சுரப்பிகளின் எடை 30 முதல் 60 கிராம் வரை இருக்கும் என்றும் கூறுகின்றார்கள்.

இதன் வலது பக்கமும் இடது பக்கமும் உருவில் சற்று பெரியதாகவும், இடைப்பட்ட நடுப்பகுதியில் கனம் குறைந்ததாகவும் காணப்படும். இந்தக் கனம் குறைந்த பகுதிக்கு இஸ்துமஸ் (isthmus) என்று பெயர்.