பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 171

தைராய்டு சுரக்கும் திரவத்திற்குப் பெயர் தைராக்ஸின் (Thyroxin). -

தைராய்டு சுரப்பியின் ஹார்மோன், பிட்யூட்டரி சுரப்பியின் முன்பகுதி சுரக்கின்ற தைரோற்றோபின் ஹார்மோனால் கட்டுப்படுத்தப்படுகிறது.

தைராய்டு சுரப்பியின் தைராக்சிஸ் ஹார்மோன் ஆனது, அயோடின் கலந்த கலவையாக இருக்கிறது.

தைராய்டு சுரக்கும் இரண்டு வித ஹார்மோன்கள்

1. தைராக்சின், 2. டிரையோடோ தைரானின்.

தைராக் சினைவிட, டிரையோடோ தைரானின் பல மடங்கு சக்தி வாய்ந்ததாகும்.

பயன்கள்

1.'உடல் வளர்ச்சிக்கு உற்ற துணையாக விளங்குகிறது. 2. வளர்சிதை மாற்றம், உயிரினத்தின் வளர்ச்சி, முதிர்ச்சி, நரம்பு மண்டலத்தின் ஒருங்கிணைந்த சீரியக்கம் ஆகியவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றது.

3. உடல் சூட்டைக் கட்டுப்படுத்துகிறது.

தைராய்டின் அதிகமாகப் பணி என்பது - அதிகமான சுரப்பாகும். இதனால் உடலில் மிகையான வளர்சிதை மாற்றம் ஏற்பட்டு, நரம்பு மண்டலம் அதிகமாகக் கிளர்ச்சி பெற்று, கடைசியாக அந்த மனிதரை அசதிக்குள்ளாக்கும் கஷ்டத்தைக் கொடுத்து விடுகிறது.

இந்த வியாதிக்குப் பெயர் பேஸ்டோவின் வியாதி என்ப தாகும். இந்த வியாதியைக் கண்டு பிடித்த பேஸ்டோவ் என்பவரின் பெயரே இதற்கு இடப்பட்டிருக்கிறது என்பது குறிப்படத்தக்க அம்சமாகும். -