பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

முண்டக்கண், நரம் புத் தளர்ச்சி, வேகமான நாடித் துடிப்பு போன்றவை நோயின் குணங்களாகும்.

தைராப் டின் மந்தமான பணி ஏற்படும் போது, மிக்சடிமா, கிரிட்டினிசம் (Cretinism) என்ற வியாதிகள் ஏற்படுகின்றன.

தாய்மார்களின் மகப்பேறு காலத்தில், அயோடின் சத்து (தண்ணீர்) குறைந்து போவதால், அவர்களுக்கு அப்போது பிறக்கும் குழந்தைகள், குறைந்த சக்தியுள்ள தைராய்டு சுரப்பிகளுடனே தான் பிறக்கும்.

அப்படிப்பட்ட தைராய்டு உள்ள குழந்தைகள், அறிவு வளர்ச்சி குறைவடைதல், சரியான வளர்சிதை மாற்றம் நிகழாது இருத்தல், உறுப்புக்களின் பொருத்தமற்ற வளர்ச்சி, மிகையான அறிவுச்சோர்வு போன்ற நிலைமையுடனேயே வளரும். அந்த வியாதிக்குக் கிரிட்டினிசம் என்ற பெயர்.

வயது வந்தவர்களுக்கு தைராய்டு சுரப்பியின் மந்தமான பணியால், உடலில் தண்ணிரும், தசைகளில் கொழுப்புப் பொருட்களும் அதிகமாகச் சேர்ந்து விடும்.

அப்பொழுது ஏற்படும் அறிகுறிகள்: முகம் பெரியதாக அளவில் மாறும். தலை, புருவம் இவற்றில் முடி உதிரும். அறிவு வளர்ச்சி குன்றும். தேகத்தில் தேவையான சூடு குறையும். இப்படிப்பட்ட வியாதிக்கு மிக்சடிமா (Myxoedema) srcarp, Quuuri.

3. பாராதைராய்டு சுரப்பி

பாராதைராய்டு சுரப்பிகள், தைராய்டு சுரப்பியின் பின்

புறப்பில் அமைந்திருக்கின்றன. இவை சிறிய முட்டை வடிவமான அமைப்பைப் பெற்றிருக்கின்றன.