பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

பாராதார்மோன் அதிகமாகச் சுரந்தாலும், அல்லது அளவுக்குக் குறைவாகச்சுரந்தாலும், அது தசைகள், நரம்புகள், நரம்புகளின் இயற்கையான செயல்முறைகளைப் பாதித்து விடுவதாய் அமைந்துவிடுகிறது.

4. தைமஸ் சுரப்பி

தைமஸ் சுரப்பி, மார்புக் கூட்டில் உள்ள, மூச்சுக் குழாய் இரு பிரிவாகப் பிரிவதற்கு முன்பாக, தைராய் டு பாரா தைராய்டு சுரப்பிகளுக்கு சற்றுக் கீழாக, அமைந்துள்ளது.

விஞ்ஞானிகளால் விளங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு, கண்டுபிடிக்க இயலாத அளவுக்கு இதன் செயல்கள் இருக்கின்றன.

பிறந்த குழந்தையின் தைமஸ் சுரப்பியின் எடை 13 கிராம் என்றும்; 11 முதல் 15 வயதுள்ள வளர்ச்சி பெற்றவர்களிடம் 35 கிராம் எடையுள்ளதாக இருக்கிறது என்றும் கூறுகின்றார்கள்.

தைமஸ் சுரக்கும் ஹார்மோனுக்கு தைமிக் ஹியூமரல் 2%Gul if (Thymic Humoral Factor) stairpi Quuff.

இதன் பயன்: தற்கால ஆய்வின்படி, தைமஸ் சுரப்பி உடலில் நுழைகிற வெளிப்புற நச்சுப் பொருட்கள், வைரஸ் கிருமிகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தி தேகத்தைத் காக்கிறது என்று தெரிகிறது. உடல் வளர்ச்சிக்கும், செக்ஸ் சுரப்பிகளுக்கும் இது உதவுகின்றது. குழந்தைப் பருவத்தில், பருவம் அடைவதற்கு முன்பாக, செக்ஸ் சுரப்பிகள் முதிர்ச்சி அடைவதை, தைமஸ் ஹார்மோன் கட்டுப்படுத்தித் தடுக்கிறது. -

செக்ஸ் சுரப்பிகள் செயலாற்றத் தொடங்கியதும், இச்சுரப்பிகள் செயலிழந்து போய் விடுகின்றன.