பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 175 தைமஸ் சுரப்பி அகற்றப்பட்டால் என்ன ஆகும் என்பதை விலங்குகள் மூலம் ஆராய்ச்சி செய்த பிறகு, கொடுத்த குறிப்புக்களில், எலும்புகள் அமைப்பு மாற்றம் பெறுகின்றன. அதாவது எலும்புகளில் வலிமை குறைந்து மிருதுவாக மாறுவதால், எளிதில் முறிந்து போகக் கூடிய தன்மையுடையனவாக்கி விடுவதுடன், குன்றிய வளர்ச்சி கொண்டவர்களாகவும் ஆக்கி விடுகின்றது என்பதே விஷேஷத் தன்மையுடைய குறிப்பாகும். 5. அட்ரீனல் சுரப்பி அட்ரினல் சுரப்பிகள், சிறுநீரகங்களின் (kidneys) மேற்பாகத்தில் அமைந்துள்ளன. - அட்ரினல் சுரப்பி இரண்டுபாகமாகப் பிரிந்திருக்கின்றது. ஒன்றின் பெயர் கார்டெக்ஸ் (Cortex) மற்றொன்றின் பெயர் G)uoQswawr (Medulla). ஒவ்வொரு அட்ரீனலும் 7 கிராம் எடையுடன் விளங்கு கிறது. இது முக்கோண வடிவம், அல்லது அர்த்த சந்திர வடிவுடன் விளங்கும். - (அ) கார்டெக்ஸ் சுரக்கும் ஹார்மோனுக்கு கார்டிசோன் (Cortison) srcipitb, GLTauq GgTair(Aldosterone) srcirto, பெய்ர். - கார்டிசோன் எனும் ஹார்மோன், சக்தியை (Energy) உற்பத்தி செய்யவும், சேகரித்து வைக்கவும் தூண்டுதலாக விளங்குகிறது. உடலில் உள்ள தாதுப் பொருள்களின் நிலைமையை சீர்படுத்துகிறது. - - உடலில் உள்ள தசைகளின் தன்மைகளை வளர்த்து விடுவதுடன், தசைச் சோர்வையும் கட்டுப்படுத்துகிறது.