பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

_

நோய்களிலிருந்து தேகத்தைப் பாதுகாக்கிறது.

பாலுணர்ச்சிப் பண்புகளை, இயற்கைத் தன்மைகளை சீர்படுத்தி செம்மை செய்கிறது. அதாவது, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உறுதுணை புரிகிறது.

புரதம், கொழுப்பு, மாவுப் பொருள் போன்றவற்றை செரிக்கச் செய்து, ஏற்படுகிற வளர் சிதை மாற்றத்தில் (Metobolism) துணைபுரிகிறது. மாவுப் பொருட்களை குளுகோசாக மாற்றவும், அவற்றைக் கல்லீரலில் சேர்த்து வைக்கவும் போன்ற காரியமாற்ற பெரிதும் இது துணை செய்கிறது. -

இந்த சுரப்பிகள் பாதிக்கப்பட்டால் அல்லது நோய் வாய்ப்படுகிறபோது, உடல் பலஹீனம் அடைகிறது. தாது உப்புக்களின் அளவும், தேகத்தில் குறைந்துபோகிறது. பாலுணர்ச்சி தடைபடுகிறது. தாக்கும் நோய்களிலிருந்து பாதுகாக்கும் தன்மை குறைவடைவதால், விரைவில் இறக்கவும் நேரிடுகிறது.

(ஆ) மெடுல் லா: சுரக்கும் ஹார்மோனுக்கு => Lifaraler (Adreanaline) argirni Guusi.

மனிதர்கள் எப்பொழுதும் அடிக்கடி கோபம், தாபம், பசி, மூச்சடைப்பு போன்ற உணர்ச்சிவசப்படும் குணாதிசயங் களைக் கொண்டவர்களாக விளங்குகின்றார்கள்.

இப்படிப்பட்ட இக்கட்டான சமயங்களில், இந்த ஹார்மோன் அதிகமாகச் சுரந்து, இரத்தத்தோடு கலந்து, உடலுக்கேற்படுகிற அபாயமான நிலமைகளிலிருந்து பாதுகாக்கிறது. -

தேகத்தில் ஏற்படுகிற மாறுதல்களாக, சருமம் வெளிறிப் போதல்; இருதயத்தில் மிகையான துடிப்பு போன்றவை