பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 16 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

o இந்த குரோமேர்சோம்களின் சிறப்புத் தன்மை என்ன வென்றால், ஒரு பரம்பரையில் உள்ள பரம்பரைக் குணங்களை, மற்றொரு பரம்பரைக்குப் பங்கப்படாமல் எடுத்துச் செல்வதாகும். அதாவது மரபு வழிக் குணங்களை மாறாமல் எடுத்துச் செல்கின்றன. அதற்கு உதவுவன ஜீன் (Gene) argrps அழைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு பிராணியின் செல்லிலும், குரோமோ சோம்கள் இருந்தாலும், அவை பிராணிக்குப் பிராணி அளவில், எண்ணிக்கையில் வேறுபடுகின்றன. -

மனிதனுடைய செல்களில் 46 குரோமோசோம்கள் இருக்கின்றன என்றும், அவை உடலில் மொத்த எண்ணிக்கையில், 33 கோடிகளாக இருக்கின்றன என்றும் விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கின்றார்கள். 46 குரோமோ சோம்களும் 23 ஜோடியாகப் பிரிந்து கொள்கின்றன. ஒரு குரோமோசோம் என்பது ஜீன்களின் தொகுப்பாக விளங்குகின்றது.

குறிப்பு: ஒரு செல்லின் உயிரானது, இந்த உட்கருவில் தான் அமைந்துள்ளது. இந்த உட்கருவை செல்லிலிருந்து அகற்றி விட்டால், அந்த செல் உயிரற்றதாகிவிடும்.

இந்த உட்கருவைச் சுற்றியுள்ள பகுதிக்குத்தான் சைட்டோபிளாசம் என்று பெயர்.

3. சைட்டோ பிளாசம்

நைட்டிரஜன், ஹைடிரஜன், பிராணவாயு போன்ற மூலப் பொருள்கள் கலந்திருக்கும் ஒரு பகுதிக்கு புரோட்டோ பிளாசம் என்று பெயர். இது உட்கருவைச் சுற்றிச் சூழ்ந்திருக்கிறது. இந்த புரோட்டோ பிளாசத்திற்கு,

சைட்டோ பிளாசம் என்று பெயர்.