பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

அவை பின் வருமாறு:

1. ஆண் பெண் உடலமைப்பு வேறுபாடு, அதாவது, உடல் அமைப்பு, தோள்பட்டை, இடுப்புப் பின் பகுதியமைப்பு, மார்புக்கூடு, மண்டை அமைப்பு.

2. தேகத்தில் தாடி, மீசை, வயிறு மார்பு போன்ற - பகுதிகளில் ஆண்களுக்கு முளைக்கக் கூடிய ரோம அமைப்பு.

3. பேசும் போது ஏற்படுகிற குரல் வித்தியாசம்.

பால் இன ஹார்மோன்கள் வகைகளை மூன்றாகக் கூறுவார்கள். 1. ஆன்ட்ரோஜென்ஸ் (Androgens) 2. ஒஸ்ட்ரோ ஜென்ஸ் (ostrogens); 3, புரோஜெஸ்ட்ரோ ஜென்ஸ் (Progestrogens). -

ஆண்பால் ஹார்மோன்

இவற்றில், டெஸ்டோஸ்டீரான் மற்றும் ஆன்ட்ரோ ஸ்டீரான் ஹார்மோன்கள் விரைகளால் (Testes) உற்பத்தி செய்யப்படுகின்றன. s

இந்த ஹார்மோன்கள், ஆண்களுக்கு ஏறத்தாழ 15 வயதாகிற போது, பூரண வளர்ச்சியடைந்து விடுகின்றன. இதன் தொழில் எடுப்பாக ஆரம்பமாகும் பொழுது, மிடுக்கான பல மாற்றங்கள், ஆண்கள் தேகத்தில் ஏற்பட ஆரம்பிக்கின்றன.

1. முகத்திலும் தேகத்திலும் மயிர் வளர்ச்சி. 2. பேசும் குரலில் கனம். அகன்ற குரல். 3. தேகத்தில் உண்டாகும் தசை அமைப்பு.

பதினைந்து வயதிற்கு முன்னதாக இச்சுரப்பிகள் அகற்றப்பட்டால், மேற்கூறிய மாற்றங்கள், தேகத்தில் எதுவும்