பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

இதன்காரணமாக மாதவிடாய் நின்று போகிறது. இதை ஆங்கிலத்தில் மெனோபாஸ் (Menopause) என்பார்கள்.

மாதவிடாய் நின்று போகிற சமயத்தில், அதிகமான நரம்புக் கிளர்ச்சி, தலைவலி, சிலசமயங்களில் உறக்கம் இன்மை போன்ற விரும்பத்தகாத விளைவுகளும் ஏற்படும். என்றாலும், அவற்றை அறிவாண்மையுடன் பொறுத்துக் கொள்ளுதல் பெண்களுக்கு அழகாகும். அந்த மனப் பண்பாடு இருந்தால் தான், மகிழ்ச்சியோடு வாழ முடியும்.

மாதவிடாய் நின்றுபோன பெண்களுக்கு மகப்பேறு பெறுகிற பாக்கியம், முடிந்து போய்விடுகிறது.

7. கணையச் சுரப்பி

கணையமானது, உட் சுர்ப்பும், வெளிச் சுரப்பும் கொண்ட ஒரு சுரப்பியாகும்.

இதன் ஹார்மோன் ஒன்று முன் சிறு குடலுக்குச் செல்கிறது. l இதைத் தவிர, கணையம் இரண்டு வித ஹார்மோன்களைச் சுரக்கின்றது. 1. இன்சுலின் (Insulin) 2. GergsfrGsircir (Glucagon). -

(அ) இன்சுலின் மாவுப் பொருளைக் கரைக்கும் பணிக்கு உதவுகிறது. இது மாவுப்பொருளைக் கரைக்கவும், கிளைகோஜனைத் தசைகளிலும் கல்லீரலிலும் சேர்த்து வைக்கவும் உதவுகிறது.

இந்த ஹர்ர்மோன் மந்தமாக சுரந்தால், நீரிழிவு நோய் (Diabetes) o sul rpg.

நீரிழிவுநோய் ஏற்பட்டுவிட்டால், திசுக்கள் சர்க்கரையை சகஜமான முறையில் தன்மயமாக்கிட முடியாமற் போகிறது. கல்லீரலும் கிளைகோஜனை சேமித்து வைப்பதில் தவறிவிடு கின்றது. அதனால், சிறுநீரில் சர்க்கரை காணப்படுகின்றது.