பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 181

(ஆ) குளுகாகோன் ஹார்மோன், கிளைகோஜன் சேமிப்பை சீர்குலைக்கும் பணியைச் செய்கிறது. அதாவது, இன்சுலின் செய்கிற விளைவுகளுக்கு எதிரான பணியில் ஈடுபடுகிறது. -

8. பீனியல் சுரப்பி

பீனியல் சுரப்பி, பெருமூளை எபிபிசிஸ் எனும் இடத்தில், ஒரு சிறிய உறுப்பாக அமைந்திருக்கிறது.

இச் சுரப்பியின் பணி பற்றி இன்னும் சரியாகக் கண்டு பிடிக்கப்படவில்லை. குழந்தைப்பருவத்தில், இச்சுரப்பி சிறந்த முதிர்ச்சிமிக்க வளர்ச்சியை அடைகிறது என்றும், இனப் பெருக்கச் சுரப்பிகள் பருவத்திற்கு முன்னதாக, வளர்ச்சியடைவதைத் தடுப்பதாகத் தெரிகிறது என்றும் குறிப்பிடுகின்றார்கள். -

உடற் பயிற்சிகளும் நாளமில்லாச் சுரப்பிகளும்

நாளமில்லாச் சுரப்பி மண்ட்லத்தின் பணிகள் நயமான பணிகள் தான். பல ஹார்மோன்கள் பாங்காக இணைந்து பற்பலத் தொழில்களில் ஈடுபட்டிருக்கின்றன. அவற்றின் வேலைகள் முழுக்க முழுக்க விளக்கிவிட முடியாத நுணுக்கம் நிறைந்தவைகளாகவே விளங்குகின்றன.

1. இளைஞர்கள், சிறுவர்கள், தங்கள் தேகத்தை மிகுதியான தகுதியும் திறமும் (Fitness) கொண்டதாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். ஏனென்றால், தகுதியான தேகம் தான்,தேகவளர்ச்சியை உற்சாகப்படுத்இ ஊக்குவிக்கும் ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றது.

உடற்பயிற்சிகள் தான், உயர்ந்த தேகத்திறனை வளர்த்துவிடுகின்றன.