பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

2. டெஸ்டோஸ்டிரோன் எனும் ஹார்மோன் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறபோது, தசைவளர்ச்சி ஏற்படுகிறது. தசைகளில் வலிமையும், நீடித்துழைக்கும் ஆற்றலும் மிகுதியடைகின்றது.

3. இன்சுலின் என்ற ஹார்மோன், அதிகமாக சுரக்கும் போது சர்க்கரையில் ஏற்படுகிற வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துகிறது. இன்சுலின் பற்றாற் குறை நீரிழிவு நோய்க்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. -

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு, உடற்பயிற்சி உணவு போல் அமைந்து விடுகிறது. உடற்பயிற்சி அவர்களுக்கு சீரான விடுதலையையும், பூரண மகிழ்ச்சியையும் வழங்குகிறது.

4. அட்ரீனலின் உற்பத்தியை, உடற்பயிற்சித் தூண்டு கிறது. அதனால் தேகத்தில் தகுதியும் திறமும் மிகுதியாக உண்டாகிறது. இப்படிப்பட்ட தகுதியுள்ள மனிதர்கள், சாதாரணமாக சுறுசுறுப்புடன் வாழ்கிறார்கள். அத்துடன் ஆபத்துக் காலத்திலும் விரைந்து செயல்பட்டு, அபாயங்களி லிருந்து விலகி வாழ்கின்றார்கள்.

உடற் பயிற்சிகள் நாளமில்லா சுரப்பிகளை உற்சாகத் துடன் செயல்பட உதவுகின்றன. உற்சாகம் ஊட்டுகின்றன.