பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

நரம்பு மண்டலம் நாமும் நரம்புகளும்

இரத்த ஒட்ட மண்டலமும், சுவாச மண்டலமும் நம்மை நன்றாக வாழ்விக்கவும், நலமாக இயங்கிக் கொள்ளவும் உதவுகின்றன. ஆனால், நமக்குக் கட்டளைகள் கொடுத்து, கட்டுப்படுத்தி, வழி காட்டி, வாழச் செய்கின்ற செயல்கள் அனைத்துக்கும் செழுமை தந்து நம்மை நன்றாக நடத்திச் செல்வது நரம்பு மண்டலமேயாகும்.

நரம்பு மண்டலமே, நமக்குத் தலையான தலைமையாக இருக்கிறது. நரம்புமண்டலத்தின் ஆணிவேர்களாக அமைந் திருப்பவை நரம்புகளேயாகும். -

உயிருள்ள ஒவ்வொரு ஜீவனுக்கும் உணர்ச்சி என்பது மிக முக்கியமான குணமாகும்.

அந்த உணர்ச்சி என்பது உடலில் பட்டதும் ஏற்படுகிற உறுத்து உணர்ச்சியாகும். (Irritability); அதை நாம் உற்றறியும் உணர்ச்சி என்றும் கூறலாம். -

இந்த உறுத்துணர்ச்சியானது, வெளி உலகில் நடை பெறுகிற விளைவுகளுக்கேற்ப, வரும் தூண்டுதல்களுக் கேற்ப, செயல்பட்டுக் கொள்கின்ற சீர் முறைகளாகும் (Response to stimuli).

எதிரே ஒரு வாகனம் வேகமாக வருகிறது. திடீரென ஒதுங்கிக் கொள்கிறோம். கண்ணுக்கு நேராக ஒருவரின் கை நீளுகிறது. நாம் கையை நீட்டி மறைத்துக் கொள்கிறோம். அல்லது கண்ணை விரைவாக மூடிக் கொள்கிறோம்.

இப்படிப்பட்ட செயல்கள் எப்படி நிகழ்கின்றன என்றால், அவைகள் நரம்புகளால் தான் நடைபெறுகின்றன.