பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

மூளையும் தண்டுவடமும் மத்திய நரம்பு மண்டலத்தில் அடங்கும். -

மூளையிலிருந்து 12 ஜோடி கபால நரம்புகளும் தண்டுவடத்திலிருந்து 31 ஜோடி தண்டுவட நரம்புகளும் வெளிவருகின்றன. இந்த நரம்புகளிலிருந்து, பல்வேறு உறுப்புகளுக்கும், திசுக்களுக்கும், கிளைகள் செல்கின்றன.

இப்படிப்பட்ட நரம்புகளையும், அவற்றின் கிளைகளை யும் வெளிப்புற நரம்பு மண்டலம் என்று அழைக்கின்றார்கள். (50.54&ch (Nerves)

நரம்பு மண்டலம் முழுவதும், நரம் புத் திசுக்களால் அமையப் பெற்றிருக்கிறது.

நரம்பு செல்கள் பல சேர்ந்து ஒரு நரம்பாக ஆகிவிடுகிறது.

அதாவது, இணைப்புத்திசு வெளி உறையுடன் கூடிய நரம்பு இழைக்கற்றைகளே நரம்பாகிவிடுகிறது.

நரம்புகள் அவற்றின் செயலுக்கேற்ப இரண்டு வகையாகிப் பணியாற்றுகிறது.

(அ) உணர்ச்சி நரம்புகள் (Afferent Nerves)

ஐம்பொறிகளிலிருந்தும் மற்றும் தேகம் முழுவதிலும் இருந்தும் செய்திகளை மூளைக்கு எடுத்துச் செல்கிற நரம்பு களை உணர்ச்சி நரம்புகள் என்ப்ார்கள். இவற்றை உட் செல்லும் நரம்புகள் என்றும் கூறலாம்.

(4) Glewoo, sootbaloch (Efferent Nerves)

அறிதலை உணர்ந்து கொண்டு, மூளை அனுப்புகிற செய்திகளை எடுத்துக் கொண்டு, உத்திரவாகத் தருகிற பணியை மேற்கொள்கிற நரம்புகளை, செய்கை நரம்புகள்